வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
2013-14-ம் ஆண்டில் இருந்து நாட்டின் மருந்துகள் ஏற்றுமதி 103% வளர்ச்சி அடைந்துள்ளது
Posted On:
01 MAY 2022 12:05PM by PIB Chennai
நாட்டின் மருந்து ஏற்றுமதி 2013-14-ம் ஆண்டில் இருந்து 103% வளர்ச்சி அடைந்துள்ளது. 2013-14-ம் ஆண்டில் தொன்னூறாயிரத்து 415 கோடி ரூபாயாக இருந்த அவற்றின் ஏற்றுமதி, கடந்த 2021-22-ம் ஆண்டில் ஒரு லட்சத்து எண்பத்து மூன்றாயிரத்து 422 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த 2021-22-ம் ஆண்டில் மருந்து ஏற்றுமதியில் சாதனை படைத்து அத்துறையில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்திய ஆண்டாக அமைந்தது. கடந்த 8 ஆண்டுகளில் ஏறக்குறைய 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஏற்றுமதி என்பது குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும்.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம், மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்தியா உலகின் மருந்துகள் சேவை மையமாக உருவெடுத்து வருவதாக கூறியுள்ளார்.
2013-14-ம் ஆண்டைக் காட்டிலும், கடந்த 2021-22-ம் ஆண்டில் இந்தியாவின் மருந்துகள் மற்றும் மருந்துப் பொருட்கள் ஏற்றுமதி இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முந்தைய நிதியாண்டு 2020-21-ல் செயல்திறனைக் அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட சிறப்பான கட்டமைப்புகள் காரணமாக, நாட்டின் மருந்து ஏற்றுமதியில் மீண்டும் 2021-22-ம் ஆண்டில் ஆரோக்கியமான செயல்திறனைப் பதிவு செய்தன. உலகளவில் நிலவிய வர்த்தக இடையூறுகள் மற்றும் கோவிட் தொடர்பான மருந்துகளுக்கான தேவை குறைந்த போதிலும் கடந்த 2021-22-ம் ஆண்டில் மருந்து ஏற்றுமதிகள் நேர்மறை வளர்ச்சியைத் தொடர்ந்தன. 15,175.81 மில்லியன் அமெரிக்க டாலர் உபரித் தொகையுடன் நாட்டின் வர்த்தக சமநிலை சாதகமாகத் தொடர்கிறது.
மருந்துகளுக்கான விலை, போட்டித்தன்மை மற்றும் நல்ல தரம் ஆகியவற்றின் காரணமாக, உலக அளவில் இந்திய மருந்து நிறுவனங்கள் உலகளவில் முத்திரை பதித்துள்ளன. உலகின் 60 சதவீத தடுப்பூசிகள் மற்றும் 20% மலிவு விலை மருந்துகள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
உலகளவில் மருந்து உற்பத்தியில் இந்தியா 3-வது இடத்தையும், அதன் மதிப்பில் 14-வது இடத்தையும் பெற்றுள்ளது. மருந்து உற்பத்தித் துறையின் வெற்றிக்குப் பின்னால் நமது உலகத் தரம் வாய்ந்த உற்பத்தித் திறன், வலுவான உள்கட்டமைப்பு, செலவு-போட்டித்தன்மை, பயிற்சி பெற்ற மனித மூலதனம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் ஆகியவை அடங்கும். இந்திய மருந்துத் துறையின் தற்போதைய சந்தை அளவு சுமார் 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1821747
***************
(Release ID: 1821769)