பிரதமர் அலுவலகம்

புதுதில்லியில் உள்ள தமது இல்லத்தில் சீக்கிய குழுவினர் இடையே பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

Posted On: 29 APR 2022 8:46PM by PIB Chennai

மதிப்புக்குரிய என்ஐடி உறுப்பினர்களே வணக்கம்.  சீக்கிய சமூகத்துடன் எனக்கு  நீண்ட கால தொடர்புள்ளது. குருத்வாராக்களுக்கு செல்வது, வழிபாட்டில் நேரத்தை செலவிடுவது, உணவைப்  பெறுவது, சீக்கிய குடும்பங்களின் வீடுகளில் தங்குவது ஆகியவை எனது வாழ்க்கையின் பகுதியாகும். இங்குள்ள பிரதமரின் இல்லத்தில் அவ்வப்போது  சீக்கிய  துறவிகளின்  காலடிகள் படுகின்றன. அவர்களுடன்  இணைந்திருக்கும் நல்வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். எனது வெளிநாட்டு பயணங்களின் போது உலகம் முழுவதும் உள்ள சீக்கிய பாரம்பரிய இடங்களுக்கு நான் சென்றுள்ளேன்.

நமது குருக்கள் தைரியத்தையும், சேவையையும் நமக்கு கற்றுத்தந்துள்ளனர். இந்திய மக்கள் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு எந்த நிதி ஆதாரங்களும் இல்லாமல் செல்கிறார்கள். தங்களின் உழைப்பால் வெற்றி பெறுகிறார்கள்.  இதுதான் இன்றைய புதிய இந்தியாவின் உணர்வுமாகும்.

குருக்களின் மகத்தான பங்களிப்புக்கும் தியாகங்களுக்கும் நான் தலை வணங்குகிறேன். குருநானக் தேவ் அவர்கள், ஒட்டுமொத்த தேசத்தின் மனசாட்சியை  தட்டி எழுப்பினார். இதன் மூலம் தேசத்தை இருளிலிருந்து வெளியே  கொண்டு வந்து வெளிச்சத்தின் பாதைக்கு அழைத்துச் சென்றார். குருக்கள் இந்தியா முழுவதும் பயணம் செய்துள்ளனர். அங்கெல்லாம் அவர்களின் அடையாளங்களும், ஊக்கங்களும் உள்ளன. குருக்களின் பாதங்கள் இந்த மகத்தான பூமியை புனிதப்படுத்தியுள்ன. அதன் மக்களை ஈர்த்துள்ளன.  ஒரே இந்தியா, உன்னத இந்தியா என்பதற்கு வாழும் பாரம்பரியமாக சீக்கிய பாரம்பரியம் உள்ளது.  விடுதலைப் போராட்டக் காலத்திலும், அதற்கு பின்னரும் சீக்கிய சமூகத்தினரின் பங்களிப்புக்கு நாடு நன்றி தெரிவிக்கிறது.  துணிவு, ஆற்றல், கடின உழைப்பு, ஆகியவற்றின் மறுபெயர்களாக சீக்கிய சமூகம், இருக்கிறது.

 அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி என்ற  மந்திரத்தை  இந்த உணர்வு வெளிப்படுத்துகிறது. கடமை உணர்வு என்பது தற்காலத்திற்கு மட்டுமல்ல, எதிர்காலை தலைமுறைகளுக்கும் முக்கியமானது. சுற்றுச்சூழல், ஊட்டச்சத்து, கலாச்சார மாண்புகள், பாதுகாப்பு, ஆகியவற்றுக்காக எப்போதும் சீக்கிய சமூகம் தீவிரமாக செயல்படுவதற்கு பாராட்டுக்கள். இதே உணர்வுடன் அண்மையில் தொடங்கப்பட்ட அமிர்த நீர்நிலைகள் இயக்கத்திற்கு பங்களிப்பு செய்ய வேண்டும்.

***************

(Release ID: 1821416)



(Release ID: 1821558) Visitor Counter : 117