பாதுகாப்பு அமைச்சகம்

ஏழு புதிய பாதுகாப்பு துறை நிறுவனங்களில் ஆறு நிறுவனங்கள், தங்கள் வணிகத்தின் முதல் ஆறு மாதங்களில் லாபம் ஈட்டியுள்ளன

Posted On: 29 APR 2022 10:58AM by PIB Chennai

அக்டோபர் 15, 2021 அன்று விஜயதசமியின் போது, தேசத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஏழு புதிய பாதுகாப்பு துறை நிறுவனங்களில், ஆறு நிறுவனங்கள், தங்கள் வணிகத்தின் முதல் ஆறு மாதங்களில், அதாவது அக்டோபர் 01, 2021 முதல் மார்ச் 31, 2022 வரை தற்காலிக லாபத்தைப் பதிவு செய்துள்ளன.

யந்த்ரா இந்தியா லிமிடெட் தவிர மற்ற இதர நிறுவனங்களான முனிஷன்ஸ் இந்தியா லிமிடெட்; ஆர்மர்டு வெஹிகல்ஸ் நிகாம் லிமிடெட்; அட்வான்ஸ்ட் வெப்பன்ஸ் அண்டு எக்யுப்மெண்ட் இந்தியா லிமிடெட்; ட்ரூப் கம்ஃபோர்ட்ஸ் லிமிடெட்; இந்தியா ஆப்டெல் லிமிடெட் மற்றும் கிளைடர்ஸ் இந்தியா லிமிடெட் ஆகியவை லாபத்தைப் பதிவு செய்துள்ளன.

இந்நிறுவனங்கள் தேசத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த புதிய பாதுகாப்பு துறை நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களாக செயல்படுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. நடப்பு நிதியாண்டில் ஏழு புதிய நிறுவனங்களுக்கு மூலதனச் செலவு மற்றும் பங்குச் செலவுக்காக ரூ.2,765.95 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

முதல் ஆறு மாதங்களுக்குள், இந்தப் புதிய நிறுவனங்கள் ரூ 8,400 கோடிக்கு மேல் விற்றுமுதல் ஈட்டியுள்ளன. தொடங்கிய நாள் முதலே புதிய சந்தைகளை ஆராயவும், ஏற்றுமதி உட்பட தங்கள் வணிகத்தை விரிவுபடுத்தவும் இந்த நிறுவனங்கள் பணியாற்றின. இந்த நிறுவனங்கள் தொடங்கப்பட்ட குறுகிய காலத்திலேயே, முறையே ரூ.3,000 கோடி மற்றும் ரூ.600 கோடி மதிப்புள்ள உள்நாட்டு ஒப்பந்தங்கள் மற்றும் ஏற்றுமதி ஆர்டர்களைப் பெற முடிந்தது.

உள் மற்றும் கூட்டு முயற்சிகள் மூலம் புதிய தயாரிப்புகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை இந்த நிறுவனங்கள் எடுத்து வருகின்றன. இந்திய ரயில்வேயிடம் ரூ 251 கோடி ரூபாய் ஆர்டர்களை ஒஐஎல் பெற்றுள்ளது.

இந்தப் புதிய நிறுவனங்கள் தங்கள் வளங்களை உகந்த முறையில் பயன்படுத்துவதற்கும், செலவுகளைக் குறைப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன. செலவைக் குறைப்பதில் கவனம் செலுத்தியதன் மூலம், முதல் ஆறு மாதங்களில் கூடுதல் பணிநேரம் மற்றும் உற்பத்தி அல்லாத நடவடிக்கைகள் போன்றவற்றில் சுமார் 9.48% மொத்த சேமிப்பை இந்த நிறுவனங்களால் செய்ய முடிந்தது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1821156

***************



(Release ID: 1821226) Visitor Counter : 230