நித்தி ஆயோக்
இந்தியாவின் புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில் முயற்சியை கவுரவிப்பதற்காக சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டு பெருவிழாவை அடல் புதிய கண்டுபிடிப்பு இயக்கம் கொண்டாடியது
प्रविष्टि तिथि:
28 APR 2022 4:09PM by PIB Chennai
இந்தியாவின் புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில் முயற்சியை கவுரவிப்பதற்காக சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டு பெருவிழாவை அடல் புதிய கண்டுபிடிப்பு இயக்கம் டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் இன்று கொண்டாடியது.
சுதந்திர காலத்தில் இருந்து தற்போதைய காலம் வரை புதிய கண்டுபிடிப்பு சூழலில் இந்தியாவின் பயணம் இந்த நிகழ்வு கொண்டாடப்பட்டது. நாட்டின் புதிய கண்டுபிடிப்பு வரலாற்றை எடுத்துரைக்கும் விதமாக 75 ஆண்டுகளின் கண்டுபிடிப்பு பயணம் சிறப்பு கண்காட்சியாக அமைக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங், நாட்டில் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான கண்டுபிடிப்புகள் உருவாக்கப்படுவதை உறுதி செய்யும் ஒட்டுமொத்த அணுகுமுறைக்காக அடல் புதிய கண்டுபிடிப்பு இயக்கத்தை பாராட்டுவதாக கூறினார்.
பள்ளிகள், பல்கலைக கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், தனியார் மற்றும் குறு-சிறு-நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தில் தொழில் முயற்சி சூழலை உருவாக்கி இருப்பதற்காகவும் அமைச்சர் பாராட்டுத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய புள்ளி விவரம் மற்றும் திட்ட அமலாக்கத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு ராவ் இந்தர்ஜித் சிங், அண்மையில் ஆறு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள அடல் புதிய கண்டுபிடிப்பு இயக்கம் “அனைவரும் இணைவோம்-அனைவரும் உயர்வோம்” என்ற அரசின் தொலைநோக்கு திட்டத்திற்கு உதவியாக இருக்கிறது என்றார்.
நித்தி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி திரு அமிதாப் காந்த், அடல் புதிய கண்டுபிடிப்பு இயக்கத்தின் இயக்குநர் டாக்டர் சிந்தன் வைஷ்ணவ் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
***************
(रिलीज़ आईडी: 1821009)
आगंतुक पटल : 1436