சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தின் கீழ் சுகாதார நிபுணத்துவ பதிவேட்டின் செவிலியர் தொகுதியை தேசிய சுகாதார ஆணையம் (NHA) வெளியிட்டுள்ளது

Posted On: 27 APR 2022 12:00PM by PIB Chennai

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தின் (ABDM) கீழ் சுகாதார நிபுணத்துவப் பதிவேட்டில் செவிலியர்களுக்கான தொகுதியை தேசிய சுகாதார ஆணையம் (NHA) வெளியிட்டுள்ளது. அனைத்து வித மருதத்துவ முறைகளையம்  சேர்ந்த மருத்துவர்களுக்கான தொகுதி மற்றும் அவர்களின் சேர்க்கை குறித்த தகவல்களும் ஏற்கனவே சுகாதார நிபுணத்துவப் பதிவேட்டில் உள்ளது. தற்போது, நாடு தழுவிய அளவில் வெளியிடப்பட்டுள்ள செவிலியர் தொடர்பான தகவல் தொகுதியின் மூலம், நவீன மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகளில் சுகாதார சேவைகளை வழங்கும் செவிலியர்களும் சுகாதார நிபுணத்துவப் பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளலாம். இந்தப் பதிவேட்டில் பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட குழுக்களால் சரிபார்க்கப்படும். அடுத்த கட்டமாக, துணை மருத்துவப் பணியாளர்கள், அடிமட்ட அளவிலான அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவ உதவிப் பணியாளர்கள், மருத்துவம் சார்ந்த சுகாதாரப் பணியாளர்கள் போன்ற பல்வேறு வகை சுகாதாரப் பணியாளர்களையும் இந்த பதிவேட்டில் சேர்க்க தேசிய சுகாதார ஆணையம் திட்டமிட்டுள்ளது.

சுகாதாரப் பணியாளர்கள் பதிவேடு (HPR) என்பது நவீன மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகளில் சுகாதார சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ள அனைத்து சுகாதார நிபுணர்களின் தகவல்கள் அடங்கிய விரிவான தொகுப்பாகும். இது ஒரு ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தின் (ABDM) முக்கிய கட்டுமானத் தொகுதியாகும்.

சுகாதாரப் பணியாளர்கள் பதிவேடு மூலம், சுகாதாரத் துறை நிபுணர்கள் நாட்டின் டிஜிட்டல் சுகாதார சூழலியல் அமைப்பில் இணைந்து நோயாளிகளுக்கு சுகாதார சேவைகள் வழங்குவதுடன், கடைசி மைல் கவரேஜ் மூலம் நோயாளிகளையம் இதில் இணைக்கலாம்.

தொலை மருத்துவம் மற்றும் ஒருங்கிணைந்த டிஜிட்டல் சேவைகளுடன் தனித்துவமிக்க நம்பகமான அடையாளம், ஆன்லைன் இருப்பு மற்றும் கண்டறியும் திறன் கண்டுபிடிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடங்கும்.

சுகாதாரப் பணியாளர்கள் தங்களது ஆதார் அட்டை அல்லது ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்தி https://hpr.abdm.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்வதன் மூலம் ஒரு சுகாதாரப் பணியாளர்கள் பதிவேட்டின் ஒரு பகுதியாக மாறலாம்.

தேசிய சுகாதார ஆணையம் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள்/துறைகள், மாநில அரசுகள் மற்றும் தனியார் துறை/சிவில் சமூக அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தை ABDM-ஐ செயல்படுத்துவதற்கு தலைமை தாங்கும் மத்திய அரசின் உச்ச அமைப்பாகும். இது பல்வேறு நிலைகளுக்கு இடையே இருக்கும் இடைவெளியைக் குறைக்கும்.

விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1820411

***************


(Release ID: 1820492) Visitor Counter : 263