இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுக்கள் 2021-க்கு மாநில அரசின் ஏற்பாடுகள் குறித்து திரு அனுராக் தாக்கூரும் ஹரியானா முதலமைச்சர் திரு மனோகர் லாலும் ஆய்வு செய்தனர்
இடுகை இடப்பட்ட நாள்:
26 APR 2022 2:44PM by PIB Chennai
வரும் ஜூன் 4 முதல் 13 வரை நடைபெறவுள்ள கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுக்கள் 2021-க்கு மாநில அரசு மேற்கொண்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அமைப்புக்குழு மற்றும் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் மத்திய இளையோர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூரும், ஹரியானா முதலமைச்சர் திரு மனோகர் லாலும் இணையம் வழியாக ஆய்வு செய்தனர். மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் துறை அமைச்சர் திரு சர்தார் சன்தீப் சிங் மற்றும் மாநில அரசு அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த இணையவழிக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் திரு அனுராக் தாக்கூர், ஹரியானா மாநிலத்தின் விளையாட்டு வீராங்கனைகள் வெளிநாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளனர் என்று பாராட்டினார்.
18 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் இந்த விளையாட்டுப் போட்டிகள் பஞ்ச்குலா தவிர ஷாபாத், அம்பாலா, சண்டிகர், தில்லி ஆகிய இடங்களிலும் நடைபெறும். 8,500 விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் போட்டிகளில் பங்கேற்பார்கள். ஐந்து உள்ளூர் விளையாட்டுக்கள் உள்பட 25 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1820118
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1820160)
வருகையாளர் எண்ணிக்கை : 144