இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கான ஒலிம்பிக் போட்டிகள் 2021-ல் பங்கேற்கும் வலுவான 65 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளைக் கொண்ட இந்திய அணியை, திரு அனுராக் தாக்கூர் உற்சாகத்துடன் வழியனுப்பி வைத்தார்

Posted On: 25 APR 2022 6:00PM by PIB Chennai

செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கான  ஒலிம்பிக் போட்டிகள் (டெஃப்லிம்பிக்ஸ்) 2021 மே 1-ல்  தொடங்கவிருக்கும் நிலையில் இதில் பங்கேற்கும்  இந்திய அணியினர் உற்சாகத்துடன் திங்களன்று அனுப்பி வைக்கப்பட்டனர். மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர், இணை அமைச்சர் திரு நிதிஷ் பிரமாணிக் மற்றும் பிரமுகர்கள் இந்த விழாவில்  கலந்து கொண்டனர்.

பிரேசிலின் காக்சியாஸ் டு சூலி-ல் நடைபெறும் டெஃப்லிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்பதற்கு இந்தியாவின் மிகவும் இளமையான 65 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளைக் கொண்ட மிகப் பெரிய அணி பங்கேற்கிறது. தடகள போட்டிகள், பேட்மின்டன், ஜூடோ, கோல்ஃப், கராத்தே, துப்பாக்கிச் சுடுதல், நீச்சல், டென்னிஸ்,  டேபிள் டென்னிஸ், டேக்வாண்டோ, மல்யுத்தம் ஆகிய 11 பிரிவுகளில் இந்த அணியினர் பங்கேற்பார்கள். இந்தப் போட்டிகள் மே 1 முதல் 15 வரை நடைபெற உள்ளன.

இந்த அணியினருக்கு வாழ்த்துகளைப் பொழிந்த திரு அனுராக் தாக்கூர், இவர்கள் பிரேசிலிலிருந்து அதிக எண்ணிக்கையில் பதக்கங்களைக் கொண்டுவருவார்கள் என்ற நம்பிக்கை  உள்ளது என்றார். ஒலிம்பிக் போட்டிகளானாலும், பாராலிம்பிக் போட்டிகள் என்றாலும், டெஃப்லிம்பிக்ஸ் போட்டிகள் என்றாலும், இந்தியா ஆற்றல் மிக்கதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கான அகில இந்திய விளையாட்டுக் கவுன்சில், இந்திய விளையாட்டு ஆணையம் ஆகியவை இந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு பெருமளவு ஆதரவு வழங்குகின்றன என்றும் அமைச்சர் கூறினார்.

2017-ல் துருக்கியில் நடைபெற்ற போட்டிகளில் இந்தியாவிலிருந்து 46 பேர் பங்கேற்றனர்.  இந்தப் போட்டிகளி்ல் இந்தியா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் ஐந்து பதக்கங்களை வென்றது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1819899

-------


(Release ID: 1819939) Visitor Counter : 189