விவசாயத்துறை அமைச்சகம்
பொது சேவை மையம் (CSC) ஏற்பாடு செய்துள்ள பயிர்க் காப்பீடு குறித்த நாடு தழுவிய பயிலரங்கை மத்திய வேளாண் அமைச்சர் தொடங்கி வைக்கிறார்
Posted On:
24 APR 2022 3:25PM by PIB Chennai
வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுடன் இணைந்து 'விடுதலைப் பெருவிழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக' 2022 ஏப்ரல் 25-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை 'விவசாயிகள் நலனே எங்கள் முன்னுரிமை' என்ற பிரச்சாரத்தை ஏற்பாடு செய்கிறது. இந்த பிரச்சாரத்தின் போது, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை, விவசாயிகளுக்காக பிராந்திய அளவில் நாடு தழுவிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்.
வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறை ஒவ்வொரு வேளாண் அறிவியல் மையத்திலும் விவசாய நிகழ்ச்சிகள் மற்றும் இயற்கை விவசாயம் குறித்த களக் கண்காட்சியை ஏற்பாடு செய்யும். பொது சேவை மையத்தால் (CSC) ஏற்பாடு செய்யப்பட்ட பயிர்க் காப்பீடு குறித்த நாடு தழுவிய பயிலரங்கை மத்திய வேளாண் அமைச்சர் தொடங்கி வைக்கிறார்.
கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்துடன் இணைந்து தீன்தயாள் அண்ணா யோஜனா - தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் (DAY-NRLM) கீழ் வேளாண் சூழலியல் மற்றும் கால்நடை பராமரிப்பு நடைமுறைகள் குறித்த சொற்பொழிவு நடைபெறும். மத்திய வர்த்தகம் மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சகம் மூலம் ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு (ODOP) என்ற ஒரு வார கால இணையவழி கருத்தரங்கம் நடத்தப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட 75 விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருடன் தேசிய அளவிலான சுய சார்பு இந்தியா மாநாடு நடத்தப்படும்.
உணவு பதப்படுத்துதால் துறை அமைச்சகம், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம் ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு அடிப்படையிலான பயிலரங்கம், இணையவழிக் கருத்தரங்கு மற்றும் துறை சார்ந்த பல்வேறு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்.
நாடு முழுவதும் நேரடி (ஆஃப்லைன்) மற்றும் மெய்நிகர் (ஆன்லைன்) ஊடகம் மூலம் 1 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் மற்றும் பங்குதாரர்கள் இந்த பிரச்சாரத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1819565
***************
(Release ID: 1819580)