ஆயுஷ்
சர்வதேச முதலாவது ஆயுஷ் முதலீடு மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் மாநாடு காந்திநகரில் முடிவடைந்தது. 9,000 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு ஈர்க்கப்பட்டது
Posted On:
23 APR 2022 1:40PM by PIB Chennai
சர்வதேச முதலாவது ஆயுஷ் முதலீடு மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் மாநாடு காந்திநகரில் நேற்றிரவு முடிவடைந்தது. இதில் மருந்து உற்பத்தித்துறை, தொழில்நுட்பம் மற்றும் நோய் கண்டறிதல், விவசாயிகள் மற்றும் வேளாண்மை ஆகிய துறைகளில் 9,000 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு ஈர்க்கப்பட்டது.
இம்மாநாட்டின் போது பல்வேறு நாடுகள், பிரபல ஆராய்ச்சி கழகங்கள், விவசாய குழுக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கிடையே 70-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் இத்துறையில் முதலீட்டை ஈர்க்கும் வகையில் இம்மாநாடு நடைபெற்றதாக தெரிவித்தார். உலகில் உள்ள முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் ஆயுஷ் துறையின் நன்மைகள் மற்றும் வலிமைகள் குறித்து உணர்ந்ததாக கூறினார். ஆயுஷ் துறையில் முதலீடு மற்றும் புதிய கண்டுபிடிப்புக்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளது என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் விவகாரத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், கடந்த 2014 ஆண்டு ஆயுஷ் துறையின் சந்தை மதிப்பு 3 பில்லியன் டாலராக இருந்த நிலையில், தற்போது 18 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டார்.
ஆண்டுக்கு 75 சதவீதம் அளவிற்கு ஆயுஷ் சந்தை மதிப்பு அதிகரித்து வருவதாக திரு அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.
மேலும் இது குறித்து விரிவான தகவலுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1819238
***************
(Release ID: 1819238)
(Release ID: 1819308)
Visitor Counter : 208