சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஏப்ரல் 22-ந் தேதி நடைபெற்ற வட்டார அளவிலான சுகாதார சேவை மேளாவில் 4 லட்சத்து 53 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்

Posted On: 23 APR 2022 12:33PM by PIB Chennai

விடுதலைப் பெருவிழாவின் ஒரு பகுதியாக ஆயுஷ்மான் பாரத் சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்களின் 4-ம் ஆண்டு விழாவை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து கடந்த 16-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடத்தியது. இதையொட்டி மத்திய சுகாதார அமைச்சர், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சுகாதார அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், மத்திய சுகாதார அமைச்சக உயர் அதிகாரிகள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சுகாதார முதன்மை செயலாளர்கள், மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் பொது மக்களிடையே ஆயுஷ்மான் பாரத் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். கடந்த 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு வட்டாரத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் பாரத், சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்களில் சுகாதார மேளாக்கள் நடைபெற்றன.  

இதன் ஐந்தாம் நாளில் 496 வட்டாரங்களில் 4 லட்சத்து 53 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். 59 ஆயிரம் பேருக்கு ஆயுஷ்மான் பாரத் அட்டைகள் வழங்கப்பட்டன. ஆயிரக்கணக்கானோருக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, காசநோய் பரிசோதனைகள் நடத்தப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1819220

***************


(Release ID: 1819276) Visitor Counter : 193