ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

26 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களின் 406 மாவட்டங்களைச் சேர்ந்த 3579 வட்டாரங்களில் பிரதமரின் பாரதிய மக்கள் மருந்து மையங்களைத் திறப்பதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

Posted On: 23 APR 2022 11:14AM by PIB Chennai

பிரதமரின் பாரதிய ஜன் அவுசதி பரியோஜனாவை ( பிஎம்பிஜேபிசெயல்படுத்தும் பார்மசூடிகல்ஸ் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அமைவனம் என்னும் முகமைபிரதமரின் பாரதிய மக்கள் மருந்து மையங்களை திறப்பதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை தனிநபர்கள்வேலையில்லாத மருந்தாளுநர்கள்அரசு நியமித்த முகமைகள்தன்னார்வ அமைப்புகள்டிரஸ்ட்சங்கங்கள் உள்ளிட்டோரிடமிருந்து வரவேற்கிறதுஆர்வமுள்ளவர்கள்  பிஎம்பிஜேபி-யின் janaushadhi.gov.in என்னும் வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம்தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு பிஎம்பிஜேபி பெயரில்  மருந்து உரிமம் பெறுவதற்கு முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொள்கை அளவில் அனுமதி அளிக்கப்படும்.

சாதாரண மக்களுக்கு குறிப்பாக ஏழைகளுக்கு தரமான மருந்துகளை குறைந்த விலையில் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற தொலைநோக்கின் அடிப்படையில் 10,000 பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தக மையங்களை மார்ச் 2024-க்குள் திறக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 31.03.2022 வரை 8,610 மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளனஇந்தத் திட்டம் நாட்டிலுள்ள அனைத்து 739 மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. 406 மாவட்டங்களைச் சேர்ந்த 3579 வட்டாரங்களில் மருந்தகங்களைத் திறப்பதற்கு புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனசிறு நகரங்கள் மற்றும் வட்டார தலைநகரங்களில் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பிஎம்பிஜேபி திட்டத்தில் 1616 மருந்துகள், 250 அறுவைச் சிகிச்சை உபகரணங்கள் 8600 மக்கள் மருந்தகங்களில் விற்கப்படுகின்றனஇந்த மருந்துகளை தடங்கலின்றி விநியோகிக்க சென்னைகுருகிராம்குவகாத்திசூரத் ஆகிய நான்கு இடங்களில் இருப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1819197

----



(Release ID: 1819226) Visitor Counter : 194