தேர்தல் ஆணையம்

தலைமை தேர்தல் ஆணையர் திரு சுஷில் சந்திரா தலைமையிலான இந்திய தேர்தல் ஆணையக் குழு தென் ஆப்பிரிக்கா மற்றும் மொரீஷியஸ் பயணம்

Posted On: 22 APR 2022 1:04PM by PIB Chennai

தலைமைத் தேர்தல் ஆணையர் திரு சுஷில் சந்திரா தலைமையிலான இந்தியத் தேர்தல் ஆணையக் குழு ஏப்ரல் 9-19, 2022 வரை தென்னாப்பிரிக்கா மற்றும் மொரீஷியஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டது.

இந்தப் பயணத்தின் போது, ​​தென்னாப்பிரிக்கா மற்றும் மொரீஷியஸ் தேர்தல் ஆணையங்களுடன் தொடர் சந்திப்புகள் நடத்தப்பட்டதோடு, இரு நாடுகளிலும் உள்ள இந்திய சமூகத்தினருடன் உரையாடல்களும் நடைபெற்றன.

மூன்று நாடுகளும் தங்கள் மக்களின் கூட்டு அனுபவங்கள் மற்றும் ஒட்டுமொத்த வலிமையின் அடிப்படையான தனித்துவமான மற்றும் வேரூன்றிய உறவைப் பகிர்ந்து கொள்கின்றன. இந்திய சமூகத்தின் உறுப்பினர்களுடனான உரையாடலின் போது, ​வெளிநாட்டு வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளுமாறு ஆணையம் அவர்களை வலியுறுத்தியது.

மின்னணு முறையில் அனுப்பப்படும் தபால் ஓட்டு முறையை வெளிநாடுகளில் உள்ள வாக்காளர்களுக்கும் விரிவுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வரும் தகவலை தலைமை தேர்தல் ஆணையர் பகிர்ந்து கொண்டார்.

தென்னாப்பிரிக்க தேர்தல் ஆணையத்தின் தலைவர் திரு சுஷில் சந்திரா மிகுந்த பாராட்டுகளைத் தெரிவித்தார். ஜனநாயகத்தில் தென்னாப்பிரிக்கா பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது என்றும் அவர் கூறினார். காந்தியை மகாத்மாவாக ஆக்கிய பூமிக்கும், நெல்சன் மண்டேலாவின் பூமிக்கும் வந்தது தனக்கு உண்மையான புனிதப் பயணம் என்று அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1818948

----



(Release ID: 1819053) Visitor Counter : 165