பாதுகாப்பு அமைச்சகம்
புதுதில்லியில் டிஃப்கனெக்ட் 2.0-ன் போது ஐடெக்ஸ்- பிரைம் & 6-வது டிபன்ஸ் இந்தியா ஸ்டார்ட்-அப் சவாலை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்
Posted On:
22 APR 2022 2:50PM by PIB Chennai
புதுதில்லியில் டிஃப்கனெக்ட் 2-0-வின் போது, ஏப்ரல் 22, 2022 அன்று பாதுகாப்புத்துறையில் சிறந்து விளங்குவதற்கான புதுமை கண்டுபிடிப்புகள் ஐடெக்ஸ்- பிரைம் மற்றும் 6-வது டிபன்ஸ் இந்தியா ஸ்டார்ட்-அப் சவாலை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். பாதுகாப்புத் துறையில் எந்த காலகட்டத்திலும் வளர்ச்சி அடையக்கூடிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உதவும் விதமாக ரூ.1.5 கோடிக்கும் மேல் ரூ.10 கோடி வரையிலான திட்டங்களுக்கு தேவையான ஆதரவை வழங்கும் நோக்கில் ஐடெக்ஸ்- பிரைம் நடத்தப்படுகிறது.
38 அம்சங்களைக் கொண்ட பாதுகாப்புத்துறை சார்ந்த ஸ்டார்ட்அப் சவாலை பாதுகாப்பு அமைச்சர் தொடங்கிவைத்தார். முப்படைகள் மற்றும் பாதுகாப்புத்துறையின் பொதுத்துறை நிறுவனங்கள் தவிர, பாதுகாப்புத்துறையில் புதிதாக தொடங்கப்பட்ட 7 நிறுவனங்கள், இந்திய கடலோர காவல்படை மற்றும் உள்துறை அமைச்சகத்திற்கு உட்பட்ட அமைப்புகளும் முதல் முறையாக இந்த மாநாட்டில் கலந்து கொண்டன. செயற்கை நுண்ணறிவு, அதிநவீன இமேஜிங், சென்சார் சாதனங்கள், பெரிய அளவிலான தரவு பகுப்பாய்வு மற்றும் சுதந்திரமாக இயங்கக்கூடிய ஆளில்லா சாதனங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட தொலைத்தொடர்பு உள்ளிட்ட பிற அம்சங்கள் இந்த சவாலில் இடம் பெற்றுள்ளன.
நிகழ்ச்சியில் பேசிய திரு ராஜ்நாத் சிங், டிஃப்கனெக்ட் 2.0, நாட்டின் தொழில்நுட்ப வல்லமை அதிகரித்து வருவதன் அடையாளமாகவும், இந்திய பாதுகாப்புத்துறை ஸ்டார்ட்அப் முறை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதை கொண்டாடும் விதமாகவும் நடத்தப்படுகிறது என்றார். பல்வேறு புதிய மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பங்களை உருவாக்க உதவுவதே ஐடெக்ஸ் திட்டத்தின் வெற்றிக்கு அறிகுறியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
2021-ம் ஆண்டுக்கான பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவோருக்கான பிரதமரின் விருதைப் பெற்ற பாதுகாப்பு உற்பத்தித் துறைக்கும் திரு ராஜ்நாத் சிங் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். புதுமை கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை எடுத்துரைப்பதி்ல், ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஐடெக்ஸ் ஒரு சிறந்த வாய்ப்பை அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1818984
***************
(Release ID: 1818984)
(Release ID: 1819031)
Visitor Counter : 216