சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

“நமது நாட்டில் மனிதசக்தியிலோ அல்லது மூளைத் திறனுக்கோ ஒருபோதும் பற்றாக்குறை இருந்ததில்லை. நாம் மட்டும் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.", டாக்டர் மாண்டவியா

இடுகை இடப்பட்ட நாள்: 21 APR 2022 12:57PM by PIB Chennai

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, தேசிய மருத்துவ அறிவியல் அகாடமியின் (NAMS) 62-வது நிறுவன தின நிகழ்வில் இன்று உரையாற்றினார். நிதி ஆயோக் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் குமார், தேசிய மருத்துவ அறிவியல் அகாடமியின் தலைவர் டாக்டர் எஸ்.கே.சரின், அதன் துணைத் தலைவர் டாக்டர். R. தயாள் மற்றும்  முன்னாள் தலைவர் டாக்டர். S.C. கோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தேசிய மருத்துவ அறிவியல் அகாடமியின்  62-வது நிறுவன தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த டாக்டர் மன்சுக் மாண்டவியா, நாடு முழுவதிலும் இருந்து 20-க்கும் மேற்பட்ட பிரபல நிறுவனங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

நாட்டின் நலனுக்காக அந்நிறுவனத்தின்   பங்களிப்பிற்காக பாராட்டுத் தெரிவித்த டாக்டர் மாண்டவியா, நமது நாட்டில் மனித சக்தியிலோ அல்லது மூளைத் திறனிலோ பற்றாக்குறை இருந்ததில்லை என்று கூறினார். நாம் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். உள்நாட்டு ஆராய்ச்சி பணிகளை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான தன்னம்பிக்கையை பெற வேண்டும் என அவர் வலியுறுத்தினார். நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், யோகா போன்றவற்றை நவீன மருத்துவ முறைகளுடன் ஒருங்கிணைக்க வேண்டியது காலத்தின் தேவை என்றும், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும், என்றும் கேட்டுக்கொண்டார்.

மேற்கொள்ளப்பட்ட நாட்டின் சுகாதார வசதிகளின் முன்னேற்றங்கள் குறித்து பேசிய அமைச்சர், “கோவிட் -19 தடுப்பூசியை உருவாக்கியது மட்டுமல்லாமல், அவற்றை மிகக் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யப்பட்டதை குறிப்பிட்டார். இந்தியாவின் கோவிட் மேலாண்மை நடவடிக்கைகள் குறித்த தவறான கணிப்புகள் இருந்த போதிலும்  தொற்றை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக நிர்வகிக்க முடிந்ததுடன், உலகளவில் நமது சிறந்த நடைமுறைகளையும் பகிர்ந்து கொண்டதாகவும் கூறினார்.

ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் தனியார் துறையுடன் ஒத்துழைக்குமாறு ஆராய்ச்சியாளர்களை டாக்டர் மாண்டவியா கேட்டுக்கொண்டார். நாட்டின் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கான எந்தவொரு ஆலோசனையையும் வவேற்பதாக அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1818623

***************


(வெளியீட்டு அடையாள எண்: 1818698) வருகையாளர் எண்ணிக்கை : 204
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Gujarati , Malayalam