ஐஃஎப்எஸ்சி ஆணையம்

தேசிய காப்பீட்டு அகாடமி உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய நிதி சேவை மையங்கள் ஆணையம் கையெழுத்து

Posted On: 20 APR 2022 11:10AM by PIB Chennai

சர்வதேச நிதிச் சேவை மையங்களில் காப்பீட்டுத் துறையில் திறன் மேம்பாடு மற்றும் திறமையான பணியாளர்களை வழங்கும் நோக்கத்துடன் சர்வதேச நிதி சேவை மையங்கள் ஆணையம், தேசிய காப்பீட்டு அகாடமியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

உலகளாவிய இணைப்பை உருவாக்குவதையும், இந்தியப் பொருளாதாரத்தின் தேவைகளில் கவனம் செலுத்துவதையும், பிராந்திய/உலக அளவில் சர்வதேச நிதித் தளமாகச் செயல்படுவதையும் சர்வதேச நிதி சேவை மையங்கள் ஆணையம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

நிதி சேவை மையங்களில் காப்பீடு ஒரு வளர்ந்து வரும் துறையாகும்,  தேசிய காப்பீட்டு அகாடமியுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் காப்பீட்டுத் துறையில் திறன் மேம்பாட்டில் சிறந்த பலன்களை அளிக்கும்.

காப்பீட்டுத் துறையை சிறந்த திறமைகளுடன் மேம்படுத்துவதற்காக செயல்படும் முன்னணி நிறுவனம் தேசிய காப்பீட்டு அகாடமி ஆகும். மாறிவரும் காப்பீட்டுத் துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இத்துறையில் பாடத்திட்டங்களை வகுத்து தொடர்ந்து மேம்படுத்துவதிலும், பயிற்சித் திட்டத்தை வழங்குவதிலும் இது ஈடுபட்டுள்ளது.

 

சர்வதேச நிதி சேவை மையத்திற்கு தேவையான திறமையான மனிதவளத்தை உருவாக்க இந்தg; புரிந்துணர்வு ஒப்பந்தம் முயற்சிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1818267

***************

 

(Release ID: 1818267)



(Release ID: 1818318) Visitor Counter : 172