பாதுகாப்பு அமைச்சகம்

கோவாவின் மர்முகோவா துறைமுகத்திற்கு அப்பால் இந்திய கடலோர காவல் படையில் தேசிய அளவிலான இரண்டு நாள் மாசுக் கட்டுப்பாட்டு பயிற்சியை பாதுகாப்புத் துறை செயலாளர் தொடங்கி வைத்தார்

Posted On: 19 APR 2022 3:46PM by PIB Chennai

கோவாவின் மர்முகோவா துறைமுகத்திற்கு அப்பால் இந்திய கடலோர காவல் படையால் நடத்தப்படும் நேட்போல்ரெக்ஸ் – VIII  எனும் தேசிய அளவிலான 8-வது மாசுக் கட்டுப்பாட்டு பயிற்சியை   பாதுகாப்புத் துறை செயலாளர் டாக்டர் அஜய்குமார்  2022 ஏப்ரல் 19 அன்று தொடங்கி வைத்தார்.  இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் இலங்கை மற்றும் பங்களாதேஷை சேர்ந்த 2 கடலோர  காவல்படை கப்பல்கள் 22 நட்பு நாடுகள் மற்றும் சர்வதேச  அமைப்புகளை சேர்ந்த 29 பார்வையாளர்கள் உட்பட 50 முகமைகளை சேர்ந்த 85- க்கும் அதிகமான  பங்கேற்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள். 

கடற்கரை பகுதியில் குவியும் கழிவுகளை  அகற்றுவதற்கான  தயாரிப்புகளை விரிவுபடுத்துவது இதன் நோக்கமாகும்.  தேசிய எண்ணெய் கசிவு அபாயத்தை தடுப்பதற்கான திட்டத்தின் நடைமுறைகள் மற்றும் வழிகாட்டி நெறிமுறைகளை தேசிய அளவிலும், பிராந்திய அளவிலும் செயல்படுத்துவதும்  இதன் நோக்கமாகும். 

நேட்போல்ரெக்ஸ் தவிர, கடற்கரையில் எண்ணெய் படிதலை சரிசெய்வதற்கும், அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்குமான தொழில் முறை பயிற்சி வகுப்புகளை இந்திய கடலோர காவல்படை தற்போது நடத்தி வருகிறது.  சென்னையில் 2022 ஏப்ரல் 18 அன்று இந்திய பெருங்கடல் கரையோர நாடுகள் சங்கத்தின் உறுப்பு நாடுகள் உட்பட 18 நாடுகளைச் சேர்ந்த சர்வதேச பங்கேற்பாளர்கள் 45 பேர் இந்த பயிற்சியை மேற்கொண்டுள்ளனர்.

***************

(Release ID: 1818023)



(Release ID: 1818073) Visitor Counter : 169