இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
மங்கோலியாவில் நடைபெற உள்ள சீனியர் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் 30 மல்யுத்த வீரர்களுக்கு இந்திய விளையாட்டு ஆணையம் ரூ.1.28 கோடி வழங்குகிறது
Posted On:
18 APR 2022 5:47PM by PIB Chennai
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற அன்சு மாலிக் மங்கோலியாவில் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கும் சீனியர் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்பதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளார். இந்தப் போட்டி வரவிருக்கும் காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. ப்ரீ ஸ்டைல் மற்றும் கிரக்கோ – ரோமன் ஆடவர் பிரிவுகளில் 20 பேரும், மகளிர் பிரிவில் 10 பேரும் பங்கேற்க உள்ளனர்.
இவர்களது பயணத்திற்கு அரசு சார்பில் இரு அணிகளுக்கும் ஒட்டுமொத்தமாக ரூ.1.28 கோடி வழங்கப்பட உள்ளது. டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ரவி தாஹியா மற்றும் பஜ்ரங் பூனியா உள்ளிட்டோரும் மங்கோலியா போட்டியில் பங்கேற்கின்றனர்.
தங்களுக்கு சிறந்த பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்தமைக்காக இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் மல்யுத்த கூட்டமைப்புக்கு நன்றி தெரிவித்துள்ள அன்சு மாலிக், வரவிருக்கும் போட்டிகளில் தாமும் சக வீரர்களும் தங்களது திறமையை வெளிப்படுத்துவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பில் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1817812
***************
(Release ID: 1817870)
Visitor Counter : 156