பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தியோகர் மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

Posted On: 13 APR 2022 10:59PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் திரு.நிஷிகாந்த் துபே அவர்களே, உள்துறை செயலாளர், ராணுவ தலைமைத் தளபதி, விமானப்படை தலைமைத் தளபதி, ஜார்க்கண்ட் டி.ஜி.பி., தேசிய பேரிடர் மீட்புப் படையின் தலைமை இயக்குனர், இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையின் தலைமை இயக்குனர், உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்களேநம்முடன் இணைப்பில் உள்ள துணிச்சல் மிக்க வீரர்களே, கமாண்டோக்களே, காவல்துறையினரே மற்றும் பிற பணியாளர்களே!

நமஸ்காரம்!

நீங்கள் அனைவரும், தொடர்ந்து மூன்று நாட்கள் 24 மணிநேரமும் பணியாற்றி, நாட்டு மக்கள் பலரது உயிரைக் காப்பாற்றுவதற்கான சிக்கலான மீட்புப் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கிறீர்கள்உங்களது வீரத்தை ஒட்டுமொத்த நாடே பாராட்டுகிறதுபாபா பைத்யநாத்-தின் அருளால் இந்தப் பணி நிறைவேறியுள்ளது என நானும் கருதுகிறேன்.   எனினும்நம்மால் சிலரது உயிரைக் காப்பாற்ற முடியாமல் போனது, நமக்கு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.   பலர் காயமடைந்துள்ளனர்உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நம் அனைவரின் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய  வாழ்த்துகிறேன்.  

நண்பர்களே,

தொலைக்காட்சி மற்றும் பிற ஊடகங்களில் இந்த மீட்புப் பணியைப் பார்த்த யாராக இருந்தாலும், இந்த சம்பவம் குறித்து கவலையும், வேதனையும் அடைந்திருப்பார்கள்.   நீங்கள் அனைவரும் சம்பவ இடத்தில் இருந்தவர்கள்அந்த சூழ்நிலை எவ்வளவு கடினமானது என்பதை நாங்கள் அறிவோம்.   எனினும்நமது ராணுவம், விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள், இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்படையினர் மற்றும் காவல்துறையினர் உருவில், திறன்மிக்க படைகள் உள்ளதை அறிந்து நாடு பெருமிதம் அடைகிறது.   இந்தப் படையினர், எந்தவொரு நெருக்கடியில் இருநதும் நாட்டுமக்களை பத்திரமாக மீட்கும் திறன் பெற்றவர்கள் ஆவர்இந்த சிக்கல் மற்றும் மீட்புப் பணிகளிலிருந்து நாம் சிலவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.   உங்களது அனுபவம், வருங்காலத்தில் மிகுந்த பயனளிப்பதாக இருக்கும்.   இந்த மீட்புப் பணியை, வெகுதொலைவில் இருந்து பார்த்து, தொடர்புகொண்டதன் அடிப்படையில் உங்கள் அனைவருடன் கலந்துரையாடுவதை நான் ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறேன்.   தற்போது, அந்தப் பணிகள் அனைத்தையும் உங்களிடமிருந்து நேரடியாக அறிந்துகொள்ள விரும்புகிறேன்.   முதலில், தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த நெஞ்சுறுதி கொண்டவர்களை சந்திக்கும் வேளையில், ஒன்றை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்; தேசிய பேரிடர் மீட்புப் படை, தனக்கென தானே ஒரு அடையாளத்தைத் தேடிக் கொண்டிருப்பதோடு, அதனை தனது கடின உழைப்பு, முயற்சி மற்றும் வல்லமையால் பெற்றுள்ளது.   இந்தியாவில் எங்கு பணியில் ஈடுபடுத்தினாலும், தேசிய பேரிடர் மீட்புப் படை, தனது கடின உழைப்பு மற்றும் தனித்துவ அடையாளத்தால் பாராட்டுக்குரியதாகவே இருக்கும்.  

நீங்கள் அனைவரும் திட்டமிட்ட முறையில், ஒருங்கிணைந்து, விரைவாக செயல்பட்டது மிகவும் சிறந்தது.  முதல் நாளன்று மாலையில்ஹெலிகாப்டரிலிருந்து ஏற்படக்கூடிய அதிர்வு மற்றும் பலத்த காற்று, கேபிள்கள் தொங்கிக் கொண்டிருக்கும் கம்பிகளை நகரச் செய்து, அதன் காரணமாக டிராலிகளுக்குள் உள்ள மக்கள் கீழேவிழக்கூடும் என்பதால்ஹெலிகாப்டரைப் பயன்படுத்துவது மிகவும் சிக்கலானது என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதை நினைவுகூற விரும்புகிறேன்.   இதனால், அது பெரும் கவலை அளிப்பதாக இருந்ததால், அதுகுறித்து இரவு முழுவதும் ஆலோசனைகள் நடத்தப்பட்டதுஇதுபோன்ற பல சிக்கல்கள் இருப்பினும், நீங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றிய விதமும், தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதும் இதுபோன்ற நெருக்கடியான தருணங்களில் மிக முக்கியம் என்று நான் நம்புகிறேன்.   நீங்கள் எவ்வளவு விரைவாக செல்கிறீர்கள் என்பதைப் பொறுத்துத்தான் அந்தப் பணியின் வெற்றி அல்லது தோல்வியைத் தீர்மாணிக்க முடியும்.   சீருடைப் பணியாளர்கள் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.   மக்கள் எப்போது துயரத்தில் இருந்தாலும், உங்களது முகத்தைப் பார்த்தவுடன் அவர்களுக்கு நிம்மதி ஏற்படும்தேசிய பேரிடர் மீட்புப் படையின் சீருடை தற்போது பிரபலமடைந்துவிட்டது.   மக்களும் உங்களுடன் பரிட்சயமாகிவிட்டனர்.   எனவே, அவர்கள் பாதுகாப்புடன் இருப்பதாகவும்; அவர்களது உயிர் பாதுகாக்கப்படும் என்றும் உணர்கின்றனர்அவர்களிடம் ஒரு புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.  

உங்களது வீரம், முயற்சி மற்றும் கருணை போன்றவற்றுடன் மக்களுக்காக பணியாற்றும் உங்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி!

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1816614

*******


(Release ID: 1817339) Visitor Counter : 154