மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு சப்கா விகாஸ் மகாக்விஸ் எனும் நாட்டின் மிகப்பெரிய வினாடி-வினா போட்டியைத் தொடங்கியுள்ளது

Posted On: 14 APR 2022 2:18PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு "அனைவரும் இணைவோம்,  அனைவரும் உயர்வோம்,  அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி" என்ற கொள்கைகளுடன் தற்சார்பு இந்தியாவைக் கட்டமைக்க உறுதிபூண்டுள்ளது. பல்வேறு  இயக்கங்கள், திட்டங்கள் மூலம் சமூகத்திலுள்ள ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களின் ஒட்டுமொத்த நலனுக்காகவும் அனைத்துக்  குடிமக்களின் தேவைகளை நிறைவேற்றுவதை உறுதிசெய்யவும் அரசு செயல்பட்டு வருகிறது. சமூகம் எனும் பிரமிடின் அடிப்பகுதியில் உள்ள கடைசி நபருக்கும் சேவை செய்வதை இவை நோக்கமாக கொண்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் மைகவ்  அமைப்பு சப்கா விகாஸ் மகாக்விஸ் தொடருக்கு ஏற்பாடு செய்துள்ளது.  இது குடிமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியின்  பகுதியாகும். பல்வேறு திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள் பற்றியும் அவற்றின் பயன்களை எவ்வாறு பெறுவது என்பது பற்றியும் பங்கேற்பாளர்களுக்கு உணர்த்துவது இந்த வினாடி வினா போட்டியின் நோக்கமாகும். இதில் பெருந்திரளான மக்கள் பங்கேற்பது அடுத்த நிலையில் அரசு ஈடுபடுவதை மேலும் ஆழப்படுத்தும். புதிய  இந்தியா குறித்த தங்களின் அறிவை சோதித்துக் கொள்ள அனைத்து மக்களும் இந்த போட்டியில் பங்கேற்குமாறு மைகவ் அழைப்பு விடுத்துள்ளது.

இந்த வினாடி வினா போட்டி மிகவும் பொருத்தமாக பாரத ரத்னா டாக்டர் பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பிறந்தநாளான 2022 ஏப்ரல் 14 அன்று தொடங்கப்பட்டுள்ளது.  பாபாசாகேப் அம்பேத்கர் சமூக நீதி,  அதிகாரமளித்தல் ஆகியவற்றின் அடையாளமாக விளங்குகிறார். சமூகத்தின் ஏழைகள், விளிம்பு நிலை மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்ய அவரது பாதைகளை அரசு பின்பற்றுகிறது.

இந்த வினாடி வினா தொடக்க நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் சப்கா விகாஸ் மகாக்விஸ் நிகழ்ச்சியில் பங்கேற்குமாறும் குடிமக்களின் ஈடுபாட்டை வலுப்படுத்துமாறும் இந்தியர்கள் அனைவரையும்  கேட்டுக்கொண்டார்.  

பொது மக்களை ஈடுபடுத்தும் அரசின் மிகப்பெரிய முன்முயற்சியில் ஒன்றாக சப்கா விகாஸ் மகாக்விஸ் நிகழ்ச்சி அமைந்திருப்பதாக மத்திய  இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின்கீழ் முதலாவது வினாடி வினா போட்டி பிரதமரின் வறியோர் நல உணவுத் திட்டம் குறித்து நடைபெறுகிறது.

இந்த வினாடி வினா போட்டி 2022 ஏப்ரல் 28 இரவு 11 30 மணிவரை (இந்திய நேரப்படி) நடைபெறும்.  இந்தப் போட்டியில் 20 வினாக்களுக்கு 300 நொடிகளில் பதிலளிக்க வேண்டும். இந்தப் போட்டி ஆங்கிலம், இந்தி,  அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு ஆகிய 12 மொழிகளில் நடைபெறும். அதிகபட்சம் ஆயிரம் மதிப்பெண்கள் பெறும்  பங்கேற்பாளர்கள் வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்படுவார்கள். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் ரூ. 2000 வீதம் தெரிவுசெய்யப்பட்ட வெற்றியாளர்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும்.

இந்த வினாடி வினா போட்டியில் பங்கேற்பதற்கான இணையதளம்: http://mygov.in/mahaquiz

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1816737

********



(Release ID: 1816788) Visitor Counter : 154