சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கனிம உற்பத்தியில் 13.2 சதவீதம் ஒட்டுமொத்த வளர்ச்சி

Posted On: 14 APR 2022 11:34AM by PIB Chennai

2022 பிப்ரவரி (அடிப்படை: 2011-12=100) மாதத்திற்கான சுரங்க மற்றும் குவாரித் துறையின் கனிம உற்பத்தியின் குறியீடு 123.2 ஆக இருந்தது, 2021 பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது இது 4.5% அதிகமாகும்.

இந்திய சுரங்க அலுவலகத்தின் தற்காலிக புள்ளிவிவரங்கள் படி,  முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட ஏப்ரல்-பிப்ரவரி, 2021-22 காலகட்டத்திற்கான ஒட்டுமொத்த வளர்ச்சி 13.2 சதவீதம் அதிகரித்துள்ளது.

பிப்ரவரி, 2022-ல் முக்கியமான கனிமங்களின் உற்பத்தி அளவுநிலக்கரி 795 லட்சம் டன்கள்பழுப்பு நிலக்கரி 47 லட்சம் டன்கள்இயற்கை எரிவாயு (பயன்படுத்தப்பட்டது) 2515 மில்லியன் கியூமீ., பெட்ரோலியம் (கச்சா) 23 லட்சம் டன்பாக்சைட் 2120 ஆயிரம் டன்குரோமைட் 373 ஆயிரம் டன்காப்பர் 9 ஆயிரம் டன் , தங்கம் 125 கிலோஇரும்பு தாது 227 லட்சம் டன்ஈயம் 29 ஆயிரம் டன்மாங்கனீஸ் தாது 293 ஆயிரம் டன்ஜிங்க் 143 ஆயிரம் டன்சுண்ணாம்பு 333 லட்சம் டன்பாஸ்போரைட் 108 ஆயிரம் டன்மேக்னசைட் 10 ஆயிரம் டன்வைரம் 48 காரட்.

பிப்ரவரி 2021- விட பிப்ரவரி 2021-ல் நேர்மறையான வளர்ச்சியைக் காட்டும் முக்கியமான தாதுக்களின் உற்பத்தியில் பின்வருவன அடங்கும்வைரம் (43.4%), பழுப்பு நிலக்கரி (24.7%), இயற்கை எரிவாயு (U) (12.5%), பாஸ்போரைட் (9.9%), துத்தநாகம் 8.7% ), பாக்சைட் (8.3%), நிலக்கரி (6.6%), இரும்புத் தாது (5.9%) மற்றும் மேக்னசைட் (0.6%).

எதிர்மறையான வளர்ச்சியைக் காட்டும் முக்கியமான தாதுக்களின் உற்பத்தியில் பின்வருவன அடங்கும்சுண்ணாம்பு (-0.5%), தங்கம் (-2.1%), பெட்ரோலியம் (கச்சா) (-2.2%), ஈயம் (-14.0%), மாங்கனீசு தாது (-17.3%) , காப்பர் (-19.8%) மற்றும் குரோமைட் (-33.1%).

மேலும் விவரங்களுக்குஇந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1816675

----



(Release ID: 1816749) Visitor Counter : 157


Read this release in: English , Urdu , Hindi , Odia