எரிசக்தி அமைச்சகம்

தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு போதிய நிலக்கரி இருப்பை உறுதி செய்யும் வகையில் 10 சதவீதம் வரையிலான கலப்பு நோக்கத்திற்காக நிலக்கரியை இறக்குமதி செய்துகொள்ளுமாறு மாநில அரசுகளை திரு ஆர்.கே.சிங் வலியுறுத்தியுள்ளார்

Posted On: 13 APR 2022 2:03PM by PIB Chennai

சில மாநிலங்களில் உள்ள மின் உற்பத்தி நிறுவனங்களின் நீண்ட தூர நிலக்கரிப் போக்குவரத்தைத் தவிர்ப்பதற்காக, இணைப்பு நிலக்கரியில் 25 சதவிகிதம் வரை சுங்கச்சாவடி வசதி அனுமதிக்கப்படும். ஐசிபி ஆலைகள், கலப்படத்திற்கான நிலக்கரி இறக்குமதி மற்றும் நிலக்கரி கையிருப்பு ஆகியவற்றை மதிப்பாய்வு செய்வதற்கான கூட்டம், மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர் திரு ஆர்.கே. சிங் தலைமையில் நடைபெற்றது. சுரங்கங்களுக்கு அருகிலுள்ள ஆலைகளில் மாநிலங்கள் தங்கள் இணைப்பு நிலக்கரியை உகந்த முறையில் பயன்படுத்துவதற்கு இந்த நடவடிக்கை உதவிடும் என்றும்,தொலை தூர மாநிலங்களுக்கு நிலக்கரி போக்குவரத்துக்கு பதிலாக மின்சாரத்தை அனுப்புவது எளிதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாநிலங்களின் முதன்மை செயலாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள், தனிப்பட்ட மின் உற்பத்தியாளர்கள் மற்றும் ICB ஆலைகளின் பிரதிநிதிகள்  ஆகியோர் கலந்து கொண்டனர். நேற்று நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் மத்திய மின் துறை செயலர் திரு அலோக் குமார், கூடுதல் செயலர் திரு விவேக் குமார் தேவாங்கன் மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர்கள் கலந்து கொண்டனர். அதிகரித்து வரும் மின்தேவையை கருத்தில் கொண்டு இந்த கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி அடிப்படையிலான ஆலைகளின் செயல்பாடுகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.  அனைத்து ஐசிபி ஆலைகளும் நியாயமான கட்டணத்தில் செயல்படுவதை உறுதி செய்ய  நிலக்கரி கொள்முதல் செய்யும் அனைத்து மாநிலங்களுக்கும் அவர் அறிவுத்தினார். ஐசிபி ஆலைகளில் உள்ள அனைத்து வகை  செயல்பாடுகள் சார்ந்த சிக்கல்களுக்கு தீர்வு காண்பதன் மூலம் அவற்றை முழுமையாக செயல்பட வைக்க முடிவு செய்யப்பட்டது.

வேகமாக அதிகரித்து வரும் மின் தேவையைக் கருத்தில் கொண்டு, அனைத்து மின் உற்பத்தி நிறுவனங்களும் பத்து சதவிகிதம் வரை  நிலக்கரி கலப்பிற்க்காக அதனை இறக்குமதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட  வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. மாநிலம் மற்றும் மின் உற்பத்தி நிறுவனங்கள் வாரியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, மழைக்காலத்தில் உள்நாட்டு நிலக்கரி விநியோகம் பாதிக்கப்படுவதால், பருவமழை தொடங்கும் முன், கலப்படத் தேவைக்கான நிலக்கரி விநியோகத்தை உறுதி செய்ய வலியுறுத்தப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1816315

***************



(Release ID: 1816417) Visitor Counter : 178


Read this release in: English , Urdu , Hindi , Bengali