அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

உணர்வு தொழில்நுட்ப அடிப்படையிலான நீர்ப்பாசன முறை தண்ணீரை சேமிப்பதோடு விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கிறது

Posted On: 13 APR 2022 2:34PM by PIB Chennai

வடிகட்டுதல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் உணர்வு தொழில்நுட்ப அடிப்படையிலான நீர்ப்பாசன அமைப்பு, நவேலிம் அருகே சால் நதி மற்றும் கோவாவின் கோர்டலிமில் உள்ள நௌடா ஏரி ஆகியவற்றில் நிறுவப்பட்டுள்ள இணைய/கைபேசி செயலி மூலம் கட்டுப்படுத்தப்பட்டு, அப்பகுதியில் தண்ணீர் வீணாவதைத் தடுப்பதோடு விவசாயிகள் பாசனத்தைக் கண்காணிப்பதை எளிதாக்குகிறது.

உணர்வு தொழில்நுட்பம் மூலம் ஈரப்பத மதிப்புகள் கண்டறியப்பட்டு தேவை உள்ளபோது மட்டுமே மோட்டார் இயக்கப்படுகிறது. இந்த செயல்முறை நீர் அரிப்பைத் தடுப்பதோடு வயல் முழுவதும் மண்ணின் தரத்தை பராமரித்து நேரத்தையும் மிச்சப்படுத்தியுள்ளது. குறிப்பாக, தினசரி கூலி விவசாயிகள் தங்கள் அறுவடைகளை சந்தையில் விற்க அவர்களுக்கு சுதந்திரம் மற்றும் நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது. இதனால் அவர்கள் உழைப்பு குறைந்து, வருமானமும் அதிகரிக்கிறது.

கோவாவின் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து தி எனர்ஜி அண்ட் ரிசோர்சஸ் இன்ஸ்டிடியூட் (டெரி) மூலம் இந்த நீர்ப்பாசன முறை செயல்படுத்தப்படுகிறது. மேலும், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஆதரவையும் பெற்றுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1816337

***************(Release ID: 1816416) Visitor Counter : 144