மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சட்டவிரோத, பதிவு செய்யப்படாத, ஒழுங்குசெய்யப்படாத மீன்பிடித்தல் குறித்த கிழக்காசிய உச்சிமாநாட்டு பயிலரங்கிற்கு இந்தியாவும், சிங்கப்பூரும் ஏற்பாடு செய்திருந்தது

प्रविष्टि तिथि: 13 APR 2022 10:32AM by PIB Chennai

இந்தியா மற்றும் சிங்கப்பூர் உணவு முகமையின் கூட்டுத் தலைமையில் சட்டவிரோத, பதிவு செய்யப்படாத, ஒழுங்குசெய்யப்படாத மீன்பிடித்தல் குறித்து நேற்று இணையம் வழியான கிழக்காசிய உச்சிமாநாட்டு பயிலரங்கிற்கு இந்திய அரசின் மீன்வளத்துறை, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகமும், சிங்கப்பூர் அரசும் ஏற்பாடு செய்திருந்தன.  மத்திய மீன்வளத்துறை செயலாளர் திரு ஜதீந்திரநாத் ஸ்வைன் முக்கிய உரை நிகழ்த்தினார். இந்த பயிலரங்கில் கிழக்காசிய உச்சிமாநாட்டின் உறுப்பு நாடுகள், 4 அறிவுசார் பங்குதாரர்கள், மத்திய அரசின் மீன்வளத்துறை அதிகாரிகள், பல்வேறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் மீன்வளத்துறை அதிகாரிகள், இதர அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

சட்டவிரோத, பதிவு செய்யப்படாத, ஒழுங்குசெய்யப்படாத மீன்பிடித்தலை முறியடிக்க கடலோர மீன்பிடி சமூகங்களுடன் பணியாற்றுவதன் மூலம் பல்வேறு முயற்சிகளை இந்தியா மேற்கொண்டதை திரு ஸ்வைன் இந்த பயிலரங்கில் பகிர்ந்து கொண்டார்.

இந்தியா மற்றும் சிங்கப்பூருடன் ஆஸ்திரேலியா, கம்போடியா, சீனா, இந்தோனேஷியா, நியூசிலாந்து, கொரியா ஆகிய நாடுகளும் இந்த பயிலரங்கில் கலந்து கொண்டன.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1816227  

***************


(रिलीज़ आईडी: 1816294) आगंतुक पटल : 134
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , English , Urdu , Marathi , Bengali , Telugu