உள்துறை அமைச்சகம்
நாட்டிலுள்ள சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர்களின் மாநாடான 'அமிர்த சங்கமத்தை' மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா புது தில்லியில் இன்று தொடங்கி வைத்தார்
Posted On:
12 APR 2022 6:54PM by PIB Chennai
நாட்டிலுள்ள சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர்களின் மாநாடான 'அமிர்த சங்கமத்தை' மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா புது தில்லியில் இன்று தொடங்கி வைத்தார் மத்திய கலாச்சாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்குப் பகுதி மேம்பாட்டு அமைச்சர் திரு ஜி கிஷண் ரெட்டி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர், விடுதலையின் அமிர்தப் பெருவிழாவை கொண்டாடுவதற்கு நாம் அனைவரும் அதிர்ஷ்டம் செய்துள்ளோம் என்றார். கடந்த 75 ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளை நாடு படைத்துள்ளது என்றும் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இன்றைக்கு இந்தியா உள்ளது என்றும் அவர் கூறினார்.
நமது கூட்டு முயற்சிகளின் மூலம் அனைத்து துறைகளிலும் பல்வேறு சாதனைகளை நாம் படைத்துள்ளம் என்று கூறிய அமைச்சர், நமது வரலாறு மற்றும் கலாச்சாரத்தை பாதுகாத்து, ஊக்குவிப்பதில் நாம் வெற்றி அடைந்துள்ளோம் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய திரு அமித் ஷா, விடுதலையின் அமிர்தப் பெருவிழாவையை ஒட்டி பல்முனை கொண்டாட்டங்கள் உடன் கூடிய தேசிய திருவிழாவை பிரதமர் திரு நரேந்திர மோடி லட்சியமாகக் கொண்டு உள்ளார் என்றார்.
விடுதலையின் அமிர்தப் பெருவிழாவில் இருந்து அடுத்த 25 வருடங்களையும், அதாவது இந்தியாவின் சுதந்திர நூற்றாண்டு வரை, கொண்டாட பிரதமர் முடிவு எடுத்திருப்பதாக அவர் கூறினார். அமிர்த காலம் என்று பிரதமர் வர்ணித்துள்ள அடுத்த 25 ஆண்டுகளில் உலகின் முதல் நாடாக இந்தியாவை மாற்றுவதற்கு 130 கோடி மக்களும் ஒன்றிணைந்து முயற்சி எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1816118
***************
(Release ID: 1816150)
Visitor Counter : 225