பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

பழங்குடியின விடுதலைப் போராட்ட வீரர்களின் அருங்காட்சியகங்கள் உருவாக்க கோட்பாடுகள் மற்றும் பரிந்துரைகள்குறித்த யுனெஸ்கோ பயிலரங்கு

Posted On: 12 APR 2022 5:00PM by PIB Chennai

மத்திய பழங்குடியினர் நல அமைச்சம் யுனெஸ்கோ ஒத்துழைப்புடன், பழங்குடியின விடுதலைப் போராட்ட  வீரர்களின் அருங்காட்சியகங்கள் உருவாக்க கோட்பாடுகள் மற்றும் பரிந்துரைகள் குறித்த இரண்டு நாள் (ஏப்ரல் 11-12) பயிலரங்கு புதுதில்லியில் உள்ள யுனெஸ்கோ இல்லத்தில் நடைபெற்றது. கடந்த பல ஆண்டுகளாக இந்த அமைச்சகத்தின் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களில் பணியாற்றும் ஐநா வளர்ச்சி திட்டம் (யுஎன்டிபி) இதனை ஒருங்கிணைத்தது. 

உலகிலேயே முதல் முறையாக  இத்தகைய அருங்காட்சியகங்கள் அமைக்கும் இந்திய அரசின் முன்முயற்சிகளை யுனெஸ்கோ இயக்குநரும் பிரதிநிதியுமான திரு எரிக் ஃபால்ட் தமது உரையில் பாராட்டினார். இத்தகைய வளாகத்தை உருவாக்குவதற்கு பழங்குடியின சமூகத்தினரை முதன்மை கூட்டாளிகளாக இணைத்து கோட்பாட்டை உருவாக்கி வடிவமைத்து காட்சிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். நியசிலாந்தில் உள்ள அருங்காட்சியகம் அந்நாட்டு அரசு மற்றும் பழங்குடியின மக்களின் கூட்டு உடைமையின் மூலம் நடத்தப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த பயிலரங்கில் பேசிய பழங்குடியினர் நல அமைச்சகத்தின் செயலாளர் திரு அனில் குமார் ஜா, பழங்குடியின மக்களின் விடுதலைப் போராட்ட பங்களிப்பை அங்கீகரிக்கவும், அவர்களின் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கவும், இத்தகைய அருங்காட்சியகங்கள் அமைக்கப்படுவதாகக் கூறினார்.  இத்தகைய அருங்காட்சியகங்களை உருவாக்க வரைமுறையான அணுகுமுறையை ஏற்படுத்துவதும், தேவையான நடைமுறைகளின் போது முக்கியமான அதிகாரிகளை ஒருங்கிணைப்பதும் இந்த பயிலரங்கின் நோக்கமாகும் என்று அவர் குறிப்பிட்டார். 

இந்த பயிலரங்கில் பழங்குடியின அமைச்சகத்தின் இணை செயலாளர் டாக்டர் நவல்ஜித் கபூர், யுஎன்டிபி-யின் பிரதிநிதி ஷோக்கோ நோடா  பேராசிரியர் அமரேஸ்வர் கல்லா உள்ளிட்டோர் இந்த பயிலரங்கில் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1816060

***************



(Release ID: 1816125) Visitor Counter : 146