நிலக்கரி அமைச்சகம்

சொந்த நிலக்கரி வளாகங்களின் உற்பத்தியை நிலக்கரி அமைச்சகம் ஆய்வு

Posted On: 12 APR 2022 12:23PM by PIB Chennai

உற்பத்தியை ஏற்கனவே தொடங்கியுள்ள அல்லது இந்த நிதியாண்டில் தொடங்கவிருக்கும் சொந்த நிலக்கரி வளாகங்களை அவற்றை ஒதுக்கீடாக பெற்றவர்களுடன்  நிலக்கரி அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட அமைப்பு ஆய்வு செய்தது.

நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் அனில் குமார் ஜெயின் தலைமையிலான இந்த கூட்டத்தின் போது, சொந்த நிலங்களில் வளாகங்களில் இருந்து 2021-22-ம் ஆண்டில் 85 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது 2020-21-ம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட 63 டன்னுடன் ஒப்பிடும் போது இது 35 சதவீதம் அதிகமாகும். 

அதிகரித்த நிலக்கரி உற்பத்தியின் மூலம் உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்யும் இடைவெளி குறைக்கப்பட்டது. நிலக்கரி உற்பத்தியை மேம்படுத்த தொடர் நடவடிக்கைகளை நிலக்கரி அமைச்சகம் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. பல்வேறு சட்ட திருத்தங்கள், விதிமுறை மாற்றங்கள், நிலக்கரி துறையின் தாராளமயமாக்கல் மற்றும் ஆய்வுக் கூட்டங்கள் இவற்றில் அடங்கும்.

தற்சமயம், அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட அமைப்பால் 106 நிலக்கரி வளாகங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. வருடாந்திர உச்ச உற்பத்தித்திறன் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்றுமதியை சார்ந்திருப்பது குறிப்பிடத்தகுந்த அளவு குறையும்.

கூட்டத்தின் போது பேசிய டாக்டர் அனில் குமார் ஜெயின், இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலை அதிகம் என்பதால் நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்கும் மிகச் சிறந்த வாய்ப்பு நிலக்கரி வளாக ஒதுக்கீடுகளை பெற்றவர்களுக்கு உள்ளது என்றார். வர்த்தக சுரங்க நடவடிக்கைகளுக்கு புதிய நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1815920  

***************



(Release ID: 1815990) Visitor Counter : 163