பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
எரிபொருள் சிக்கனம் மற்றும் எரிசக்தித் திறன் குறித்த செய்தியை பரவலாக்க விழிப்புணர்வு இயக்கத்தை பிசிஆர்ஏ தொடங்கியது
இடுகை இடப்பட்ட நாள்:
11 APR 2022 5:12PM by PIB Chennai
பெட்ரோலிய சேமிப்பு மற்றும் ஆராய்ச்சி சங்கம் (பிசிஆர்ஏ) மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் உதவியுடன் மக்களை மையப்படுத்திய எரிபொருள் சிக்கனம் மற்றும் எரிசக்தித் திறன் குறித்த வருடாந்திர மகா இயக்கத்தை இன்று தொடங்கியது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் செயலாளரும், பிசிஆர்ஏ தலைவருமான திரு பங்கஜ் ஜெயின் இதனை தொடங்கி வைத்தார். இந்த இயக்கம் “பசுமை மற்றும் தூய்மை எரிசக்தி என்ற மையப்பொருளுடன் சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டு பெருவிழாவாக” 2022 ஏப்ரல் 30 வரை நடைபெறும்.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் வீட்டு வசதி, நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி, இத்துறையின் இணையமைச்சர் திரு ராமேஷ்வர் தெலி ஆகியோரின் பெட்ரோலிய சேமிப்பு செய்திகளுடன் நிகழ்ச்சி தொடங்கியது. இதைத் தொடர்ந்து எண்ணெய் மற்றும் எரிவாயு சேமிப்புக்கு திரு பங்கஜ் ஜெயின் உறுதிமொழி செய்து வைத்தார்.
பின்னர், நிகழ்த்திய முக்கிய உரையில் ஒவ்வொருவரும் அன்றாட வாழ்க்கையில், எரிபொருள் சிக்கனம் என்ற மந்திரத்தை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியின் போது, எரிபொருள் சிக்கனம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, ஆடியோ, வீடியோ சாதனங்களுடன் அச்சிடப்பட்ட வாசகங்களை கொண்ட பிரச்சார வாகனத்தை அவர் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
எரிசக்தித் திறன் குறியீட்டில் சிறப்பிடத்தை பெற்ற திரவ எரிவாயு தொழிற்கூடங்கள், எரிசக்தி தணிக்கை பரிந்துரைகளை சிறப்பாக அமல்படுத்திய தொழில் நிறுவனங்கள், பல்வேறு மாநில அரசுகள் எரிசக்தி சிக்கனத்தில் சிறப்பாக செயல்பட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இந்த நிகழ்ச்சியின் போது விருதுகள் வழங்கப்பட்டன.
எரிசக்தி சிக்கனம், எரிபொருள் சேமிப்பு ஆகியவற்றை வலியுறுத்தி நாடுமுழுவதும் எண்ணற்ற நிகழ்ச்சிகளுக்கும், செயல்பாடுகளுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1815680
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1815734)
வருகையாளர் எண்ணிக்கை : 333