குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ராம நவமியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் வாழ்த்து

प्रविष्टि तिथि: 09 APR 2022 5:16PM by PIB Chennai

ராம நவமியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் தமது வாழ்த்து செய்தியில் கீழ்கண்டவாறு கூறியுள்ளார்:

“ராம நவமி புனித நாளில், சக மக்கள் அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ராம நவமி என்பது ராமரின் கொள்கைகளை நினைவுகூரவும், அவற்றை நம் வாழ்வில் பயன்படுத்தவும் ஒரு நல்ல சந்தர்ப்பம் ஆகும். நல்லொழுக்கம், சகிப்புத்தன்மை, இரக்கம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய உயர்ந்த விழுமியங்களைப் பின்பற்ற அவரது வாழ்க்கை நம்மைத் தூண்டுகிறது.

நமது கடமைகளை நாம் செய்யும் போது இந்த விழுமியங்களால் நம் வாழ்க்கை வழிநடத்தப்படட்டும்.

ராமர் காட்டிய வழியைப் பின்பற்றி,  சிறந்த தேசத்தைக் கட்டமைக்க உறுதி ஏற்போம்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1815225

*********


(रिलीज़ आईडी: 1815244) आगंतुक पटल : 197
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi