பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

குவஹாத்தியில் நாளை நடைபெறவுள்ள 8 வடகிழக்கு மாநிலங்களின் மண்டல மாநாட்டிற்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிர்தி இரானி தலைமை தாங்குகிறார்

Posted On: 09 APR 2022 10:35AM by PIB Chennai

குவஹாத்தியில் நாளை நடைபெறவுள்ள 8 வடகிழக்கு மாநிலங்களின் மண்டல மாநாட்டிற்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிர்தி இரானி தலைமை தாங்குகிறார். இதில் அசாம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், திரிபுரா, மிசோரம், மேகாலயா, சிக்கிம் மற்றும் நாகாலாந்து மாநிலங்களின்  அரசு அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.

 அண்மையில் தொடங்கப்பட்ட போஷான் 2.0, வத்சல்யா, ஷக்தி இயக்கங்களின் செயல் நடவடிக்கைகளை உறுதி செய்வது குறித்து மண்டலவாரியாக அரசு அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட பிரதிநிதிகளுடன் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது. முதலாவது கூட்டம் சண்டிகரில் கடந்த 2-ந் தேதியும் இரண்டாவது கூட்டம் பெங்களூருவில் 4-ம் தேதியும் நடைபெற்றது.

 பொருளாதார மற்றும் சமூக மாற்றத்தில் சிறந்த நிலையை அடையவும், நாட்டின் நீடித்த வளர்ச்சிக்கும்  இந்திய மக்கள் தொகையில் 67.7 சதவீதம் பிரதிநிதிகளை கொண்ட  மகளிர் மற்றும் குழந்தைகளின் அதிகாரம் அளித்தல் மற்றும் பாதுகாப்புக்காக அவர்களுக்கான ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்வது அவசியமாகிறது. இதை கருத்தில் கொண்டு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை இந்த மூன்று முக்கிய இயக்கங்களை தொடங்குவதற்கு ஒப்புதல் அளித்தது. இந்த இயக்கங்கள்  2021-22 நிதியாண்டு முதல் 2025-26-ம் ஆண்டு வரை அமல்படுத்தப்படவுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1815123

***********



(Release ID: 1815163) Visitor Counter : 188