ஆயுஷ்
உலகின் முதலாவது பாரம்பரிய மருந்துக்கான உலகளாவிய மையத்தின் பூமி பூஜை இடத்தை மத்திய ஆயுஷ் அமைச்சர் சர்பானந்த சோனாவால் பார்வைட்டார்
प्रविष्टि तिथि:
08 APR 2022 4:04PM by PIB Chennai
உலகின் முதலாவது பாரம்பரிய மருந்துக்கான உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய மையத்திற்கு குஜராம் மாநிலம் ஜாம் நகரில் பூமி பூஜை நடைபெறும் இடத்தை மத்திய ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் இன்று பார்வைட்டார். ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்திய ராஜேஷ் கொட்டேச்சா அமைச்சருடன் பங்கேற்றார். பூமி பூஜை நிகழ்ச்சி ஏப்ரல் 19 அன்று நடைபெற உள்ளது. 2 வாரங்களுக்கு முன் உலக சுகாதார நிறுவனத்தின் மூலம் இந்த மையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் ஆயுஷ் அமைச்சகம் கையெழுத்திட்டது.
ஏப்ரல் 19 அன்று நடைபெறும் நிகழ்ச்சியில், பிரதமர் திரு நரேந்திர மோடியும் உலக சுகாதார நிறுவன தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ராஸ் கெர்பரேசசும் பங்கேற்பார்கள்.
பூமி பூஜை இடத்தை பார்வையிட்ட பின் மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டத்தை நடத்திய அமைச்சர் சோனாவால், இந்த மருந்து மையம் குறித்து செய்தியாளர்களிடம் விவரித்தார். இந்த முன்முயற்சி குறைந்த செலவில் நம்பகமான சுகாதார சேவையை இந்தியாவிற்கு வழங்குவது மட்டுமின்றி உலக சமூகத்திற்கு வழங்கவும் பயன்படும் என்று அவர் கூறினார். நவீன விஞ்ஞானத்தையும், பாரம்பரிய மருந்தையும் ஒருங்கிணைப்பது நீடித்த சுகாதார நடைமுறையை கட்டமைக்க வழி வகுக்கும் என்று திரு சோனாவால் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1814833
----
(रिलीज़ आईडी: 1815045)
आगंतुक पटल : 194