சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் ஜன் ஆரோக்கியா திட்டத்தின் கீழ் தேசிய சுகாதார ஆணையம் புதிய முன்முயற்சிகளை அறிவித்துள்ளது
தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் மகாபலிபுரத்தில் நடைபெற்ற என்எச்ஏ தென் மண்டல ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்
Posted On:
08 APR 2022 3:08PM by PIB Chennai
மகாபலிபுரத்தில் நடைபெற்ற தென் மண்டல ஆய்வுக் கூட்டத்தில் தேசிய சுகாதார ஆணையம், ஐசிடி-11 (சர்வதேச நோய் வகைபடுத்துதல்) மூலம் நோயாளிகளை வகைப்படுத்துதல் மற்றும் ஆயுஷ்மான் பாரத் பிஎம் ஜன் ஆரோக்கிய திட்டத்திற்கான ஐசிஎச்ஐ (சர்வதேச சுகாதார தலையீடு வகைப்படுத்துதல்) என்ற புதிய முன்முயற்சி அறிமுகம் செய்வது குறித்து அறிவித்தது.
தேசிய சுகாதார ஆணையம், தென் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய திட்டம் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய மகாபலிபுரத்தில் மண்டல ஆய்வுக் கூட்டத்தை நடத்தியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கியா திட்டத்தின் கீழ் சுகாதார பயன் தொகுப்பு 2022 என்ற பெயரில் புதிய வடிவத்தை தேசிய சுகாதார ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வடிவில் 365 புதிய நடைமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதையும் சேர்த்து தொகுப்பின் எண்ணிக்கை 1949 ஆக உயர்ந்துள்ளது.
தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ஆர்.எஸ்.சர்மா ஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கியா திட்டத்தை தென் மண்டலம் வெற்றிகரமாக செயல்படுத்தியிருப்பதாக அவர் பாராட்டினார்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1814806
****
(Release ID: 1814923)