உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற தேசிய பேரிடர் மீட்புப் படை (என்.டி.ஆர்.எஃப்) ஏற்பாடு செய்த பேரிடர் மீட்புக்கான திறன் மேம்பாடு - 2022 தொடர்பான வருடாந்திர மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா, தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்

प्रविष्टि तिथि: 07 APR 2022 5:25PM by PIB Chennai

தில்லியில் உள்ள  விஞ்ஞான் பவனில் இன்று  நடைபெற்ற தேசிய பேரிடர் மீட்புப் படை (என்.டி.ஆர்.எஃப்) ஏற்பாடு செய்த பேரிடர் மீட்புக்கான திறன் மேம்பாடு - 2022 தொடர்பான வருடாந்திர மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா, தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.

பிரதமர் தலைமையிலான தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், அனைத்து மாநில முதல்வர்கள் தலைமையிலான மாநில பேரிடர்  மேலாண்மை ஆணையம், இணைந்து  முழுமையான ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன், பேரிடர் மேலாண்மையை மத்திய, மாநில அரசுகள் நம்பிக்கையுடன் செயல்படுத்தி வருகின்றன என்று நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா தெரிவித்தார்.

பேரிடர் மீட்பு பணியை வளங்கள் அல்லது ஆய்வுக் கட்டுரைகள் மூலம் மட்டும் மேற்கொள்ள முடியாது, அவற்றை அடிமட்டத்தில்  இருப்பவர்களின் திறன் மேம்பாட்டை வளர்ப்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

பல்வேறு முகமைகள் தங்களின் பங்களிப்பு குறித்த  தெளிவுடன் இணைந்து செயல்பட வேண்டும். முகமைகளின் பங்களிப்பிற்கிடையே  இடைவெளி இருந்தால், அதற்கான .அடிப்படை திறன் மேம்பாட்டை வளர்க்காமல் பூர்த்தி செய்ய இயலாது என்றும் அவர் கூறினார்.

130 கோடி மக்கள்தொகை கொண்ட பரந்து விரிந்த தேசத்தின் மக்கள் மத்தியில் எந்த ஒரு அமைப்பும் அதன் தொடக்கத்திலிருந்து இவ்வளவு குறுகிய காலத்தில் தன்னம்பிக்கையையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியதில்லை.

நாட்டில் எங்கும், எந்தப் பகுதியிலும் பேரிடர் ஏற்பட்டால், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படை மீட்பு பணிகளுக்காக வந்துள்ளது  என்று மக்களுக்குத் தெரிந்தால், அவர்களின் கவலைகளில் பாதி மறைந்துவிடும்.

பல்வேறு சம்பவங்களின் போது, தேசிய பேரிடர் மீட்புப் படை சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று  உயிர்களையும் உடைமைகளையும் காப்பாற்றியது மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்பியுள்ளது என்று திரு அமித் ஷா குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1814508

***************


(रिलीज़ आईडी: 1814597) आगंतुक पटल : 171
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , Manipuri