புவி அறிவியல் அமைச்சகம்
பூமியில் உயிர்களின் தோற்றத்தை அறிய ஆழ்கடல் ஆய்வு
प्रविष्टि तिथि:
07 APR 2022 12:57PM by PIB Chennai
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய புவி அறிவியல் (தனிப்பொறுப்பு) மற்றும் அறிவியல் & தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
ஆழ்கடல் நிலைகள், உயிருக்கு உகந்த மூலக்கூறுகள் மற்றும் உயிரினக் கூறுகளின் உருவாக்கம் பற்றிய ஆய்வுகளில் கவனம் செலுத்துவது சமீபத்தில் தொடங்கப்பட்ட ஆழ்கடல் திட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
ஆழ்கடல் உயிரி மாசு, உயிர் ஆய்வுகளின் தோற்றம் ஆகியவற்றுக்கு 5 ஆண்டுகளுக்கு ரூ 58.77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொடக்கத்தில் 5 ஆண்டுகளுக்கு ஆழ்கடல் திட்டம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து புவி அறிவியல் அமைச்சகம் இந்த ஆய்வை ஒருங்கிணைக்கும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1814382
***************
(रिलीज़ आईडी: 1814449)
आगंतुक पटल : 272