நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) சிறு-குறு-நடுத்தர பிரிவு பொம்மை உற்பத்தியாளர்களுக்கு 630 உரிமங்களை வழங்கியுள்ளது

Posted On: 06 APR 2022 3:58PM by PIB Chennai

28.03.2022 நிலவரப்படி, இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) சிறு-குறு-நடுத்தர பிரிவு பொம்மை உற்பத்தியாளர்களுக்கு 630 உரிமங்களை வழங்கியுள்ளது என மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சர் திரு அஸ்வினி குமார் சவ்பே மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் கூறியதாவது: பிஐஎஸ் வழங்கியுள்ள மொத்தம் 661 உரிமங்களில் உள்ளூர் பொம்மை உற்பத்தியாளர்களுக்கு 630 உரிமங்கள் அதாவது 95 சதவீத உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

பிஐஎஸ் சான்றிதழ் பெறுவதற்கு, பொம்மைகளின் பாதுகாப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  அதன்படி, இந்திய தரத்திற்கு ஏற்றவகையில், பொம்மைகளின் பாதுகாப்பு குறித்த ஐ எஸ் ஐ முத்திரை பெறுவது அவசியமாகும்.  ஐ எஸ் ஐ முத்திரையின்றி எந்த நிறுவனமோ, நபரோ பொம்மைகளை தயாரித்து, விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

***************



(Release ID: 1814178) Visitor Counter : 168