வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியா- ஆஸ்திரேலியா வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு வர்த்தகத்தை தற்போதுள்ள 26-27 பில்லியன் அமெரிக்க டாலரை 2030-க்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தும் என்று திரு பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்
Posted On:
06 APR 2022 3:45PM by PIB Chennai
இந்தியா- ஆஸ்திரேலியா வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு வர்த்தகத்தை தற்போதுள்ள 26-27 பில்லியன் அமெரிக்க டாலரை 2030-க்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தும் என்று திரு பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். மெல்பர்ன் பல்கலைக்கழகத்தில் இன்று ஆஸ்திரேலிய வர்த்தகம், சுற்றுலா, முதலீட்டுத்துறை அமைச்சர் திரு டான் டெஹான் முன்னிலையில் உரையாற்றிய அவர் இவ்வாறு கூறினார்.
இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு ஆஸ்திரேலிய வர்த்தகர்களுக்கு திரு பியூஷ் கோயல் அழைப்பு விடுத்தார். “வெளிப்படைத்தன்மையை உங்களுக்கு நாங்கள் அளிக்கிறோம். எங்களின் நம்பத்தன்மையையும், சட்டத்தின் ஆட்சியையும் உங்களுக்கு வழங்குகிறோம். நாம் இருவரும் ஜனநாயக நாடுகள், இருநாட்டு மக்களும் விளையாட்டை நேசிப்பவர்கள், நாமிருவரும் காமன்வெல்த் உறுப்பினர்கள்” என்றும் அவர் கூறினார்.
மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இருநாடுகளைச் சேர்ந்த வணிக சமூகத்தின் உறுப்பினர்களிடையேயும் அமைச்சர் உரையாற்றினார். இந்தியாவின் மிகப்பெரிய சந்தையும், ஆஸ்திரேலியாவின் உபரி மூலதனமும் இருநாடுகளுக்கும் பரஸ்பரம் பயனளிப்பவை என்று அவர் குறிப்பிட்டார்.
பின்னர் ஆஸ்திரேலியா- இந்தியா வர்த்தகசபை ஏற்பாடு செய்திருந்த வணிகத் தலைவர்களின் விருந்து நிகழ்ச்சியில் முக்கிய உரை நிகழ்த்திய திரு கோயல் இந்த்ஆஸ் இசிடிஏ வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றும் பலதுறை பொருளாதார மதிப்புத் தொடர்களை பரவலாக மேம்படுத்த இது பங்களிப்பு செய்யும் என்றார்.
முன்னதாக மெல்பர்னைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மறைவுக்கு திரு பியுஷ் கோயல் அஞ்சலி செலுத்தினார். இவரது திடீர் மறைவு காரணமாக லட்சக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் துக்கம் அனுசரித்ததாகவும் அவர் கூறினார். கிரிக்கெட் வீரரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் திரு கோயல் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1814099
***************
(Release ID: 1814163)