விண்வெளித்துறை

விண்வெளி அறிவியல், செயற்கைக்கோள் மேம்பாடு, விண்வெளி ஆராய்ச்சியில் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் நோக்கில் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கான கல்பனா சாவ்லா மையம் சண்டிகர் பல்கலைக்கழகத்தில் 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட்டது

Posted On: 06 APR 2022 2:11PM by PIB Chennai

விண்வெளி அறிவியல், செயற்கைக்கோள் மேம்பாடு, விண்வெளி ஆராய்ச்சியில் எதிர்கால சவால்களை எதிர்கொள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் நோக்கிலும்,, எதிர்கால தொழில்நுட்பங்களில் இந்தியா முன்னணி வகிக்கும் வகையிலும்,  சண்டிகர் பல்கலைக்கழகத்தில் 2022-ம் ஆண்டு ஜனவரி 03-ம் தேதி கல்பனா சாவ்லா விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு  தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப பரிமாற்ற வழிமுறை மூலம் ஆர்வமுள்ள மற்றும் தகுதி வாய்ந்த தொழில்களுக்கு மாற்றுவதற்கான இஸ்ரோவால்  அடையாளம் காணப்பட்ட விண்வெளி தொழில்நுட்பங்கள் உள்ளதாக மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மத்திய இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்; மாநில அமைச்சர் (தனிப் பொறுப்பு) புவி அறிவியல்; பிரதமர் அலுவலக இணையமைச்சர், பணியாளர், பொது குறைகள், ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளி, டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவையின் அனுமதியின் பேரில், தேவையின் அடிப்படையில் தொழில்நுட்ப வசதிகளைப் பகிர்வது உட்பட, அரசு சாரா தனியார் நிறுவனங்களுக்காக விண்வெளித் துறை திறக்கப்பட்டுள்ளது.

நாட்டின் விண்வெளித் துறையை வலுப்படுத்துவதற்காக, நாடு முழுவதும் உள்ள பல முன்னணி நிறுவனங்களில் விண்வெளி அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பயன்பாடுகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிப்பதற்காக இன்குபேஷன் செல்கள் மற்றும் விண்வெளி தொழில்நுட்பக் பிரிவுகள் நிறுவப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். விண்வெளித் துறை, நாடு முழுவதும் உள்ள ஆர்வமுள்ள கல்வியாளர்களுக்கு அத்துறையில் கவனம் செலுத்த ஏதுவாக   ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை வழங்க வகை செய்கிறது. விண்வெளி சார்ந்த நடவடிக்கைகளில் அரசுசாரா நிறுவனங்களை ஈடுபடுத்துவதற்காக இந்திய விண்வெளிக் கொள்கை, 2022-ஐ விண்வெளித் துறை வகுத்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1814045

***************



(Release ID: 1814118) Visitor Counter : 335


Read this release in: English , Urdu , Punjabi , Gujarati