விண்வெளித்துறை
இஸ்ரோவின் ஆராய்ச்சிக்கு ஆதரவாக நாட்டில் அதிக ஆராய்ச்சி மையங்களை நிறுவ அரசு உத்தேசித்துள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
06 APR 2022 2:09PM by PIB Chennai
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
2022-ல் திட்டமிடப்பட்டுள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் திட்டங்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு:
* ஈஓஎஸ்-06 புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை ஏவுவதற்கான பணி மற்றும் 1 பிரத்யேக வணிகப் பணி உட்பட 2 போலார் செயற்கைக்கோள் ஏவுதல் வாகனம் (பிஎஸ்எல்வி) பணிகள்.
* இஸ்ரோவின் சிறிய செயற்கைக்கோள் ஏவுதல் வாகனத்தின் (எஸ்எஸ்எல்வி) 2 மேம்பாட்டு விமானங்கள்.
* நாவிக்-கான என்விஎஸ்-01 வழிசெலுத்தல் செயற்கைக்கோளை ஏவுவதற்கான ஜியோசின்க்ரோனஸ் செயற்கைக்கோள் ஏவுகணை வாகனம் (ஜிஎஸ்எல்வி) பணி
* தகவல் தொடர்பு செயற்கைக்கோள் பணி (ஜிசாட்-24)
* ஜியோசின்க்ரோனஸ் செயற்கைக்கோள் ஏவுதல் வாகனம் (ஜிஎஸ்எல்வி)- மார்க் III
இஸ்ரோவின் ஆராய்ச்சிக்கு ஆதரவாக நாட்டில் அதிக ஆராய்ச்சி மையங்களை நிறுவ அரசு உத்தேசித்துள்ளது. தற்போதுள்ள விண்வெளி தொழில்நுட்ப வழிகாட்டுதல் மையம், விண்வெளிக்கான பிராந்திய கல்வி மையம் ஆகியவற்றுக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ 200 லட்சம் மானியம் கிடைக்கும். புதிய மையங்களும் நிறுவப்படும்.
இந்திய விண்வெளி திட்டத்தின் திறனை மேம்படுத்துதல், விண்வெளி அறிவியல் மற்றும் புவி கண்காணிப்பு தரவு தளத்தை விரிவுபடுத்துதல், தரை நிலைய நெட்வொர்க்குகளை விரிவுபடுத்துதல், கூட்டு சோதனைகள் மூலம் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துதல் மற்றும் தளங்களை உருவாக்குதல் போன்ற நோக்கங்களுடன் வெளிநாட்டு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து அரசு திட்டங்களை செயல்படுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1814043
***************
(Release ID: 1814109)