ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பார்சலை வீடு வீடாக அனுப்பவிருக்கும் ரயில்வே

இடுகை இடப்பட்ட நாள்: 06 APR 2022 2:20PM by PIB Chennai

இந்தியா போஸ்ட் மற்றும் இந்திய ரயில்வே இணைந்த பார்சல் சேவை உருவாக்கப்பட்டுள்ளது. பார்சலை வாங்கும் இடத்திலும், பார்சலை கொடுக்கும் இடத்திலும்  அஞ்சல்துறை சேவை செய்யும். இந்த பார்சலை ரயில் நிலையங்களுக்கிடையே கொண்டு செல்லும் சேவையை ரயில்வே செய்யும். இந்த திட்டத்தின் நோக்கம் வணிகர்களிடமிருந்து வணிகர்களுக்கு மற்றும் வணிகர்களிடமிருந்து வாடிக்கையாளர்களுக்கு என்பதாகும்.  அதாவது அனுப்புகின்றவரின் இடத்தில் இருந்து  கொண்டு சென்று பெறுகின்றவரின் இடத்தில் அளிப்பதாகும்.

 முன்னோட்ட அடிப்படையில்  இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் முதல் சேவை 2022 மார்ச் 31-ல் சூரத்- வாரணாசி இடையே நடைபெற்றது.

 மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் இதனை தெரிவித்தார்.  

***************


(வெளியீட்டு அடையாள எண்: 1814107) வருகையாளர் எண்ணிக்கை : 211
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , Bengali , Gujarati