விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய வேளாண் உள்கட்டமைப்பு நிதி வசதி: தமிழ்நாட்டில் பயனாளிகளின் எண்ணிக்கை

Posted On: 05 APR 2022 3:56PM by PIB Chennai

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

வேளாண் உற்பத்தியில் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் பங்கின் அடிப்படையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் கோடி நிதி வசதியுடன் கூடிய வேளாண் உள்கட்டமைப்பு நிதி விநியோகிக்கப்பட்டுள்ளது.

 வேளாண் உள்கட்டமைப்பு நிதியின் கீழ் நாடு முழுவதும் உள்ள பயனாளிகளின் எண்ணிக்கை 11083 ஆகும். இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 296 பேர் பயனடைந்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1813671

 

*******


(Release ID: 1813828)
Read this release in: English , Urdu , Manipuri , Telugu