ஆயுஷ்
azadi ka amrit mahotsav

உலக சுகாதார தினத்தன்று செங்கோட்டையில் ஆயுஷ் அமைச்சகம் யோகா பெருவிழாவைக் கொண்டாடவிருக்கிறது

प्रविष्टि तिथि: 05 APR 2022 4:44PM by PIB Chennai

சர்வதேச யோகா தினத்திற்கு 75 நாட்களுக்கு முன் உலக சுகாதார தினமான 2022 ஏப்ரல் 7 அன்று, காலை 6.30 மணி முதல் 8.00 மணி வரை தில்லியில் உள்ள செங்கோட்டையில், ஆகஸ்ட் 15 பூங்கா பின்னணியில் யோகா பெருவிழா எனும் பிரமாண்டமான நிகழ்ச்சிக்கு ஆயுஷ் அமைச்சகம் ஏற்பாடு செய்து வருகிறது.  

இந்த  நிகழ்ச்சியில் மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா தலைமை விருந்தினராக பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தில்லியில் உள்ள பல்வேறு நாடுகளின் தூதர்கள், பிரபல விளையாட்டு ஆளுமைகள், யோகா குருக்கள் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஒப்புதல் அளித்துள்ளனர்.

வரவிருக்கும் 8-வது சர்வதேச யோகா தினம் சுதந்திரத்தின் 75வது ஆண்டுப்  பெருவிழாவையொட்டி நடைபெறுவதால், நாடு முழுவதும் உள்ள 75 முக்கியமான இடங்களில் யோகா தினத்தை நடத்த அமைச்சகம் உத்தேசித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1813728                                   

***************


(रिलीज़ आईडी: 1813815) आगंतुक पटल : 371
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Malayalam