வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
மூன்று-நாள் ஆஸ்திரேலிய பயணத்தை திரு பியூஷ் கோயல் தொடங்கினார்
Posted On:
05 APR 2022 2:31PM by PIB Chennai
இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில நாட்களுக்குப் பின்னர், மூன்று-நாள் ஆஸ்திரேலிய பயணத்தை மத்திய வர்த்தகம், தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்று தொடங்கினார்.
இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் குறித்து இந்த பயணத்தின் போது மக்களிடம் நான் எடுத்துச் செல்வேன் என்றும் வணிகத் தலைவர்கள், இந்திய மாணவர்கள், புலம்பெயர்ந்தோர் போன்றவர்களுடன் தொடர்புகொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் திரு கோயல் கூறினார்.
இந்தப் பயணத்தின் போது, ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்வது குறித்து ஆஸ்திரேலிய வர்த்தகம், சுற்றுலா மற்றும் முதலீட்டு அமைச்சர் திரு டான் டெஹானுடன் விரிவான விவாதங்களை திரு கோயல் நடத்துவார்.
பத்து ஆண்டுகளுக்கும் அதிகமான காலகட்டத்தில் வளர்ந்த நாட்டு ஒன்றுடனான இந்தியாவின் முதல் வர்த்தக ஒப்பந்தம் இதுவாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு இது வழிவகுக்கிறது. ஆஸ்திரேலிய பிரதமரின் சிறப்பு வர்த்தகத் தூதர் திரு டோனி அபோட்டுடனும் திரு கோயல் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் உள்ள மெல்போர்ன் சட்டப் பள்ளியில் அமைச்சர் டான் டெஹான் மற்றும் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் திரு ஆலன் மியர்ஸ் ஆகியோருடன் பொது உரையாடலில் அவர் உரையாற்றுவார்.
ஆஸ்திரேலியா இந்தியா நிறுவனம், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் உள்ளிட்டவற்றையும் அமைச்சர் பார்வையிடவுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1813602
******
(Release ID: 1813808)