இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஃபிட் இந்தியா (உடல் தகுதி இந்தியா) வினாடி-வினா போட்டியில் மாநில அளவில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்

தமிழ்நாட்டில் திருவள்ளூரைச் சேர்ந்த இருவரும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்

Posted On: 04 APR 2022 4:11PM by PIB Chennai

ஃபிட் இந்தியா எனப்படும் உடல் தகுதி இந்தியா வினாடி வினா போட்டியில் மாநில அளவிலான சுற்றுக்களில் 36 வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சம்பந்தப்பட்ட மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களை வரவிருக்கும் தேசிய போட்டிகளில் பிரதிநிதித்துவம் செய்வார்கள்.

மாநில அளவிலான இறுதிப் போட்டிகள் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெற்றன. மொத்தம் 359 பள்ளிகள் பங்கேற்பதற்கு தகுதி பெற்றிருந்தன. மாநில அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு தலா ரூ.2.75 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும். (ரூ.25 ஆயிரம் +2.5 லட்சம் பங்கேற்பாளர்களுக்கும் அவர்களின் பள்ளிகளுக்கும் வழங்கப்படும். வெற்றிப் பெற்றவர்கள் வரவிருக்கும் தேசிய அளவிலான சுற்றுக்களில் அவரவர் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தை பிரதிநிதித்துவம் செய்வார்கள்.

மாநில அளவில் 2-ஆவது இடத்தைப் பெற்றவர்கள் தலா 1.1 லட்சம் (ரூ.10,000 + ரூ.1 லட்சம்), ரொக்கப் பரிசு பெறுவார்கள்.
3-ஆவது இடத்தைப் பிடித்தவர்கள் தலா ரூ.55,000 (ரூ.5,000 +ரூ.50,000) ரொக்கப் பரிசு பெறுவார்கள்.

தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தேவி அகாடமி சீனியர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், எச்.நவீத் அகமதும், வருண் ஆனந்த் ஐயங்காரும் வெற்றிப் பெற்று முதல் பரிசைப் பெற்றுள்ளனர்.

2-வது இடத்தை புஷ்பலதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஆர்.விஸ்வேஷ், எம். நஜீஹா ஃபாத்திமா  ஆகியோரும், 3-வது இடத்தை செட்டிநாடு ஹரிஸ்ரீ வித்யாலயத்தின் தருண் ஜெயராஜ், விநாயக் கோபால தேசிகா ஆகியோரும், 4-வது இடத்தை அம்ருதா வித்யாலயத்தின் வி.தனுஷ், பி.நித்திஷ் குமார் ஆகியோரும் பெற்றுள்ளனர்.

 புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த அமலோற்பவம் லார்ட்ஸ் அகாடமியைச் சேர்ந்த அஜீஷ் பிரியன் கே. மற்றும் நவீன் பிரியன் எஸ். ஆகியோர் வெற்றிப் பெற்று முதல் பரிசைப் பெற்றுள்ளனர்.

2-வது இடத்தை ஸ்டாண்ட் போர்டு இன்டர்நேஷனல் மேல்நிலைப் பள்ளியின் வி.ஜே.ஜெயஸ்ரீ, எம்.பிரசனாக்ஷே ஆகியோரும், 3-வது இடத்தை செயின்ட் பேட்ரிக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் கனே ஸ்ரீ சேது சாய் ப்ரனீதா, லோகேஸ்வரன் ஆகியோரும், 4-வது இடத்தை ஜவஹர் நவோதயா வித்யாலயாவின் ஆர்.பாலாஜி, நிஹாரிகா பிரியதர்ஷினி காந்தி ஆகியோரும் பெற்றுள்ளனர்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1813200

 

***************


(Release ID: 1813334) Visitor Counter : 236