உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கிரிஷி உதான் திட்டத்தின் கீழ் 53 விமான நிலையங்கள் சேர்க்கப்பட்டுள்ளன

2021-22-ம் நிதியாண்டில் (2022-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி வரை) 1,08,479 மெட்ரிக் டன் அளவிலான எளிதில் அழுகக்கூடிய சரக்குகள் கையாளப்பட்டன.

Posted On: 04 APR 2022 2:19PM by PIB Chennai

க்ரிஷி உதான் திட்டம், கடந்த 2020-ம் ஆண்டில்  சர்வதேச மற்றும் தேசிய வழித்தடங்களில், விவசாயப் பொருட்களைக் கொண்டு செல்வதில் விவசாயிகளுக்கு உதவுவதற்காகத் தொடங்கப்பட்டது. முக்கியமாக மலைப்பகுதிகள், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் இருந்து எளிதில் அழிகிப்போகும் உணவுப் பொருட்களைக் கொண்டு செல்வதில் கவனம் செலுத்தும் வகையில் தற்போது நடைமுறையில் உள்ள வசதிகளை மேம்படுத்துவதற்காக கிரிஷி உதான் 2.0 கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபரில் அறிவிக்கப்பட்டது. முதல்கட்டமாக அகர்தலா, அகட்டி, பாரபானி, டேராடூண், திப்ருகர், திமாபூர், கக்கல், இம்பால், ஜம்மு, ஜோர்ஹாட், குலு (புந்தர்), லே, லெங்புய், லிலாபரி ஆகிய 25 விமான நிலையங்கள், வடகிழக்கு மண்டலங்கள், மலைப்பாங்கான மற்றும் பழங்குடியினர் பகுதியில் இந்த திட்டம் கவனம் செலுத்துகிறது. பாக்யோங், பந்த்நகர், பித்தோராகர், போர்ட் பிளேர், ராய்பூர், ராஞ்சி, ரூப்சி, சிம்லா, சில்சார், ஸ்ரீநகர் மற்றும் தேசு. அதைத் தொடர்ந்து, மற்ற 28 இந்திய விமான ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள  விமான நிலையங்கள், அதாவது, அடம்பூர் (ஜலந்தர்), ஆக்ரா, அமிர்தசரஸ், பாக்டோக்ரா, பரேலி, புஜ், சண்டிகர், கோயம்புத்தூர், கோவா, கோரக்பூர், ஹிண்டன், இந்தூர், ஜெய்சால்மர், ஜாம்நகர், ஜோத்பூர், கான்பூர் (சகேரி), கொல்கத்தா, நாசிக், பதான்கோட், பாட்னா, பிரயாக்ராஜ், புனே, ராஜ்கோட், தேஜ்பூர், திருச்சி, திருவனந்தபுரம், வாரணாசி மற்றும் விசாகப்பட்டினம் ஆகியவை இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

கிரிஷி உதான் என்பது சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை, மீன்வளத் துறை, உணவு பதப்படுத்துதல் துறை  அமைச்சகம், வர்த்தகத் துறை, பழங்குடியினர் விவகார அமைச்சகம் ஆகிய எட்டு அமைச்சகங்கள் / துறைகள் இணைந்து செயல்படும் திட்டமாகும். , வடகிழக்கு பிராந்தியத்தின் மேம்பாட்டு அமைச்சகம் (DoNER) வேளாண் உற்பத்திப் பொருட்களின் போக்குவரத்திற்கான தளவாடங்களை வலுப்படுத்த, தற்போதுள்ள திட்டங்களைப் பயன்படுத்துகிறது. இது திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு இல்லை.

இத்திட்டத்தின் கீழ், தரையிறக்கம், வாகன நிறுத்துமிடம், டெர்மினல் நேவிகேஷனல் லேண்டிங் கட்டணங்கள் (TNLC), மற்றும் இந்திய சரக்குகள் மற்றும்  பயணியர் பகுதியிலிருந்து  (P2C) சரக்கு முனையத்திற்கு செல்லும்  பாதை வசதிக்கான கட்டணங்கள் (RNFC) ஆகியவற்றை முழுவதுமாக கட்டண தள்ளுபடி செய்து  விமானப் போக்குவரத்தின் மூலம் விவசாய உற்பத்தியை எளிதாக்குதல் மற்றும் ஊக்குவிக்க வகை செய்கிறது. இந்திய விமான நிலைய ஆணையத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட விமான நிலையங்கள், முதற்கட்டமாக வடகிழக்கு மண்டலங்கள், மலைப்பாங்கான மற்றும் பழங்குடியினர் பகுதியை மையமாகக் கொண்ட சுமார் 25 விமான நிலையங்களும் மற்ற பகுதிகளில் உள்ள 28 விமான நிலையங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

2021-22-ம் நிதியாண்டில் (28 பிப்., 2022 வரை) மொத்தம் 1,08,479 மெட்ரிக் டன் எளிதில் அழுகிப்போகும் சரக்குகள் (சர்வதேச + உள்நாட்டு) கையாளப்பட்டதுடன் கடந்த 2020-21-ம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில்,  84,042 மெட்ரிக் டன்கள் கையாளப்பட்டன. க்ரிஷி உடான் திட்டம் அதன் பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்படுகிறது.

 

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றிற்கு  மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை  இணை அமைச்சர் ஜெனரல் (டாக்டர்) வி.கே.சிங் (ஓய்வு) எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில்  இந்த தகவலை தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1813140

 

*****


(Release ID: 1813259) Visitor Counter : 462