இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஊக்கமருந்து சோதனையை வலுப்படுத்தும் புதிய அரியவகை ரசாயன மேற்கோள் பொருட்களை திரு அனுராக் சிங் தாக்கூர் அறிமுகப்படுத்தினார்

Posted On: 03 APR 2022 1:46PM by PIB Chennai

தேசிய ஊக்கமருந்து சோதனை ஆய்வகத்தின் ( என்டிடிஎல்) சாதனையாக, ஆறு புதிய வகை மேற்கோள் பொருட்கள் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் ஊக்கமருந்து சோதனை ஆயவகங்களுக்கு தேவையான தூய்மையான ரசாயனமாக இது உள்ளது. தேசிய ஊக்கமருந்து சோதனை ஆய்வகம், குவகாத்தியில் உள்ள தேசிய மருந்து கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஜம்முவில் உள்ள சிஎஸ்ஐஆர்- இந்திய ஒருங்கிணைப்பு மருந்து நிறுவனம் ஆகியவற்றுடன் சேர்ந்து இந்த ஆறு பொருட்களை தயாரித்துள்ளது.

மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், என்டிடிஎல்-ன் 15-வது நிர்வாக குழு கூட்டத்தில், விளையாட்டுத் துறை செயலர் திருமதி சுஜாதா சதுர்வேதி மற்றும் உயர் அதிகாரிகள் முன்னிலையில் ரசாயனப் பொருட்களை அறிமுகம் செய்தார்.

இந்த வகை வேதிப்பொருட்களை உருவாக்கியுள்ள  சில ஆய்வகங்களில் ஒன்றாக என்டிடிஎல் திகழ்கிறது. நிகழ்ச்சியில், இந்த சாதனை பற்றி பேசிய திரு தாக்கூர், ‘’ இந்த மூன்று நிறுவனங்களின் விஞ்ஞானிகளை நான் பாராட்டுகிறேன். இடையறாமல் பாடுபட்டு அவர்கள் இந்த பொருட்களை உருவாக்கியுள்ளனர். இது பிரதமர் திரு நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியாவை நோக்கிய சாதனையாகும். வெகு விரைவில், இந்தப் பொருட்களை நாம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வோம்’’ என்று கூறினார்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1812937

***************


(Release ID: 1812976) Visitor Counter : 350