இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
2,509 கேலோ இந்தியா விளையாட்டு வீரர்களின் வழிச்செலவுக்காக 7.22 கோடி ரூபாயை இந்திய விளையாட்டு ஆணையம் விடுவித்தது
प्रविष्टि तिथि:
02 APR 2022 1:52PM by PIB Chennai
2022-ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 2,509 கேலோ இந்தியா விளையாட்டு வீரர்களின் வழிச்செலவுக்காக 7.22 கோடி ரூபாயை இந்திய விளையாட்டு ஆணையம் விடுவித்தது. கேலோ இந்தியா திட்டத்தின் ஆண்டு உதவித்தொகையாக ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் ரூ.6.28 லட்சம் ஒதுக்கப்படுகிறது. இதில் ரூ.1.20 லட்சம் வழிச்செலவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வழிச்செலவுக்கான தொகை விளையாட்டு வீரரின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக அனுப்பப்படும். மற்ற தொகை கேலோ இந்தியா அகாடமியில் அவர்களுக்கான பயிற்சி, உணவு, தங்குமிடம், கல்வி ஆகியவற்றுக்காக செலவிடப்படும். சொந்த ஊருக்கு பயணம், உணவுக் கட்டுப்பாடு ஆகியவற்றுக்கான செலவும் இதில் அடங்கும். மற்ற செலவுகளை விளையாட்டு வீரர்கள் ஏற்க வேண்டும். கேலோ இந்தியா திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1812733
***************
(रिलीज़ आईडी: 1812772)
आगंतुक पटल : 218