உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சாதனை அளவிலான பறக்கும் நேரத்தை இந்திரா காந்தி தேசிய விமானப் பயிற்சிப்பள்ளி எட்டியுள்ளது

Posted On: 01 APR 2022 11:12AM by PIB Chennai

இந்தியாவின் மிகப் பெரிய விமானப் பயிற்சிப் பள்ளியான இந்திரா காந்தி ராஷ்டிரிய உதான் அகாடமி, 19,000 பறக்கும் மணிநேர இலக்கை 2021-22-ல் நிறைவு செய்துள்ளது. 2021-22 நிதியாண்டில் மொத்தம் 19,110 பறக்கும் நேரத்தை அது நிறைவு செய்துள்ளது.

1986-ல் பயிற்சிப் பள்ளி நிறுவப்பட்டதிலிருந்து பறந்த நேரங்களில் இது மிக அதிகமாகும். இதற்கு முன்னர் 2013-14-ல் 18,776 பறக்கும் மணிநேரங்கள் நிறைவு செய்யப்பட்டன. ஆனால் 24 விமானங்களைக் கொண்டு அது எட்டப்பட்டது. தற்போதைய சாதனை 18 விமானங்களை கொண்டு செய்யப்பட்டுள்ளது.

2021-22 இல் இப்பள்ளியின் ஒரு விமானத்திற்கான பயன்பாட்டு நேரம் ஆண்டுக்கு 1062 மணிநேரம் ஆகும். பயிற்சி நிறுவனத்தின் வரலாற்றில் ஆண்டுக்கு ஒரு விமானம் 1000 மணிநேரம் என்ற மேஜிக் எண்ணிக்கையை கடந்தது இதுவே முதல் முறை. இதற்கு முன் 2013-14-ல் ஒரு விமானம் ஆண்டுக்கு 782 மணிநேரம் பயணித்ததே அதிகபட்சமாக இருந்தது.

2020-21-ம் ஆண்டில், 13,282 மணிநேரப் பறக்கும் நேரத்தை இந்திரா காந்தி தேசிய விமானப் பயிற்சி நிறைவு செய்ததோடு மற்றும் 62 வணிக விமானி உரிமம் வைத்திருப்பவர்களை உருவாக்கியது. கொவிட்-19 காரணமாக ஏற்பட்ட கடுமையான இடையூறுகளுக்கு இடையிலும் இந்த எண்ணிக்கை எட்டப்பட்டது.

கொவிட்டுக்கு முந்தைய ஆண்டான 2019-20-ல் 14,830 மணி நேரங்களை இப்பள்ளி நிறைவுசெய்து 67 விமான உரிமம் வைத்திருப்பவர்களை உருவாக்கியது.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1812207

***************


(Release ID: 1812363) Visitor Counter : 154