குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் பெண்களின் பங்களிப்பு: தமிழகத்திற்கு வழங்கப்பட்ட நிதி விவரம்
Posted On:
31 MAR 2022 12:52PM by PIB Chennai
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை இணை அமைச்சர் திரு. பானு பிரதாப் சிங் வர்மா கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
குழந்தை பாலின விகிதம் குறைந்து வருவதையும், பெண்களின் அதிகாரமளிப்பு தொடர்பான சிக்கல்களையும் தீர்க்க, பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் என்ற திட்டத்தை ஜனவரி 2015-ல் இந்திய அரசு அறிமுகப்படுத்தியது.
பாலின தொடர்பான அழித்தலைத் தடுப்பது, பெண் குழந்தைகளின் வாழ்வையும் பாதுகாப்பையும் உறுதி செய்தல் மற்றும் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் பங்களிப்பை உறுதி செய்தல் இத்திட்டத்தின் நோக்கங்கள் ஆகும்.
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை பதிவு செய்வதற்கான உத்யோக் ஆதார் மெமோராண்டம் தாக்கல் செய்வதற்கான முந்தைய செயல்முறையை ஜூலை 2020-ல் உத்யம் பதிவு மூலம் அரசு மாற்றியுள்ளது.
உத்யம் தளத்தில் பதிவு செய்யப்பட்ட பெண்கள் தலைமையிலான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 2020-21-ம் ஆண்டில் 4.9 லட்சம் பெண்கள் தலைமையிலான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பதிவு செய்திருந்த நிலையில், 2021-22-ம் ஆண்டில் (28.03.2022 வரை) சுமார் 8.59 லட்சம் பெண்கள் தலைமையிலான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.
இந்திய ரிசர்வ் வங்கியிடம் உள்ள தரவுகளின்படி, 31.3.2021 நிலவரப்படி, நாட்டின் வணிக வங்கிகளில் உள்ள மொத்த 211.65 கோடி கணக்குகளில், 70.64 கோடி கணக்குகள் பெண்களுக்கு சொந்தமானது.
பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள கணக்குகளில் எண்ணிக்கை 4,03,08,448 ஆகவும், ஒப்புதல் அளிக்கப்பட்ட தொகை ரூ 1,85,295 கோடி ஆகவும், வழங்கப்பட்ட தொகை ரூ 1,82,806 கோடி ஆகவும் உள்ளது.
பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் பெண்கள் வைத்திருக்கும் கணக்குகளின் எண்ணிக்கை 2,64,46,737 ஆகவும், ஒப்புதல் அளிக்கப்பட்ட தொகை ரூ 89,988 கோடி ஆகவும், வழங்கப்பட்ட தொகை ரூ 89,235 கோடி ஆகவும் உள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1811828
************************
(Release ID: 1812105)
Visitor Counter : 231