வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மகாராஷ்டிராவில் கழிவுகளை அகற்றும் திட்டத்திற்காக ரூ 433.74 கோடிக்கு இந்திய அரசு ஒப்புதல்

Posted On: 30 MAR 2022 10:21AM by PIB Chennai

தூய்மை இந்தியா இயக்கத்தின் அகில இந்திய முன்முயற்சியின் மூலம் தூய்மை மற்றும் சுகாதாரம் தொடர்பான பிரச்சனைகள் தீர்க்கப்பட்ட விதம் பரவலாகப் பாராட்டப்பட்டுள்ளது.

அக்டோபர் 2021 அன்று பிரதமர் திரு. நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட தூய்மை இந்தியா இயக்கம் - நகர்ப்புறம் 2.0, மாறிவரும் நடத்தை முறைகளின் அடிப்படையில் ஒரு முன்னுதாரண மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

பல்லாண்டுகளாக இருக்கும் குப்பை மேடுகள் மற்றும் சாக்கடைகளுக்கு தீர்வு காண்பதற்கான 'லக்ஷ்யா ஜீரோ டம்ப்சைட்' திட்டம் தூய்மை இந்தியா இயக்கத்தின் இலக்குகளில் ஒன்றாகும், பாரம்பரிய கழிவுகளை சரி செய்வது குப்பையில்லா கனவுக்கு அருகில் நாட்டை கொண்டு செல்வதோடு வளங்களை மீட்டெடுத்து பொருளாதார மேம்பாட்டிற்கு வழிவகுக்கும்.

குப்பை கொட்டும் இடங்கள் பெரும்பாலான நகரங்களுக்கு ஒரு பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது, மகாராஷ்டிராவின் கிரேட்டர் மும்பை பகுதி அதிகபட்சமான மரபு கழிவுகளை கொண்டுள்ளது. ஏறத்தாழ 355 ஏக்கர் மதிப்புமிக்க நிலத்தை மீட்டெடுப்பதன் மூலம் அதன் நகர்ப்புற நிலப்பரப்பை மாற்றியமைத்து 2.6 கோடி மெட்ரிக் டன் மரபுக் கழிவுகளை சரி செய்வதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

திடக்கழிவு மேலாண்மையை திறம்பட நிர்வகிப்பதில் மகாராஷ்டிராவை ஆதரிக்க, 3.7 கோடி மெட்ரிக் டன் கழிவுகளுக்கு தீர்வு காண 28 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ 433.72 கோடிக்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

தகவல்களை தொடர்ந்து பெற தூய்மை இந்தியா இயக்கத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் சமூக ஊடக பக்கங்களைப் பின் தொடரவும்:

முகநூல்: Swachh Bharat Mission - Urban 

டிவிட்டர்: @SwachhBharatGov

யூடியூப்: Swachh Bharat Mission-Urban

இன்ஸ்டாகிராம்: sbm_urban

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1811199

 

*********


(Release ID: 1811564) Visitor Counter : 190