சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
ஹைட்ரஜனால் இயக்கப்படும் காரில் வந்த திரு நிதின் கட்கரி, நீடித்த வளர்ச்சிக்கு பசுமை ஹைட்ரஜன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்
प्रविष्टि तिथि:
30 MAR 2022 12:21PM by PIB Chennai
மத்தி்ய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி, இன்று (30.03.2022), ஹைட்ரஜன் எரிபொருள் அடிப்படையிலான மின்சார வாகனத்தில் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார். ‘பசுமை ஹைட்ரஜன்’ மூலம் இயங்கக் கூடிய காரின் செயல்பாடு குறித்து விவரித்த திரு கட்கரி, ஹைட்ரஜன் அடிப்படையிலான எரிபொருள் செல்லுடன் இயங்கும் மின்சார வாகனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், இந்தியாவில், ஹைட்ரஜன் சார்ந்த அமைப்புக்கு ஆதரவு அளிப்பதால் ஏற்படக் கூடிய பலன்கள் குறித்தும் எடுத்துரைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பசுமை ஹைட்ரஜன் இந்தியாவின் உற்பத்தி செய்யப்படும் என்று உறுதியளித்த திரு கட்கரி, பசுமை ஹைட்ரஜன் நிரப்பும் நிலையங்களை அமைப்பது, நாட்டில் நீடித்த வேலைவாய்ப்புகளை உருவாக்க வகை செய்யும் என்றும் தெரிவித்தார். இந்தியா விரைவில் பசுமை ஹைட்ரஜன் ஏற்றுமதி நாடாக உருவெடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் தூய்மையான மற்றும் நவீன தொழில்நுட்பம் அடிப்படையிலான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துவது என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, மத்திய அரசு ‘தேசிய ஹைட்ரஜன் இயக்கம்’ வாயிலாக பசுமை மற்றும் தூய்மையான எரிசக்தித் துறைகளில் கவனம் செலுத்த உறுதி பூண்டுள்ளது என்றும் திரு நிதின் கட்கரி தெரிவித்தார்.
------
(रिलीज़ आईडी: 1811334)
आगंतुक पटल : 244