உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடு முழுவதும் 21 பசுமை விமான நிலையங்கள் அமைக்க கொள்கை அளவிலான ஒப்புதல்

प्रविष्टि तिथि: 28 MAR 2022 2:50PM by PIB Chennai

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் டாக்டர். வி.கே.சிங் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

கோவாவில் மோபா, மகாராஷ்டிராவில் நவி மும்பை, சிந்துதுர்க் மற்றும் ஷிர்தி, கர்நாடகாவில் பிஜப்பூர், ஹாசன், காலாபுரகி மற்றும் சிமோகா, மத்தியப் பிரதேசத்தில் தப்ரா, உத்தரப் பிரதேசத்தில் குஷிநகர் மற்றும் ஜெவார்,  குஜராத்தில் தொலேரா மற்றும் ஹிராசர், புதுச்சேரியில் காரைக்கால் உட்பட 21 இடங்களில் பசுமை விமான நிலையங்கள் அமைக்க மத்திய அரசு கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கியது.  இவற்றில் 8 பசுமை விமான நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன.

பிராந்திய இணைப்பு திட்டமான உதான் திட்டத்தை விமான போக்குவரத்து துறை அமைச்சகம் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது.

உதான் திட்டத்தின் கீழ் பிராந்திய இணைப்புக்கு 14 நீர்வழி விமானநிலையங்கள், 36 ஹெலிகாப்டர் தளங்கள் உட்பட 154 விமான நிலையங்கள் விமான போக்குவரத்துக்கு அடையாளம் காணப்பட்டுள்ளன.  மார்ச் 14ம் தேதி வரை, உரிய அளவு பயன்படுத்தப்படாமல், பயன்பாட்டுக்கு வராமல் இருந்த   66 விமான நிலையங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதன் விவரங்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1810466

************


(रिलीज़ आईडी: 1810646) आगंतुक पटल : 277
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , Bengali , Manipuri , Gujarati